காலநிலை மாற்றத்தின் விளைவால் பிரம்மபுத்திரா நதியை ஒட்டிய தீவு ஒன்று அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் அருகே உள்ளது மஜுலி தீவு. பிரம்மபுத்திரா நதியை ஒட்டிய மிகப்பெரிய தீவு இன்று அழிவு நிலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தீவு வருகிற 2040-ம் ஆண்டில் முற்றிலும் அழிந்துவிடும் என்கிற எச்சரிகையும் விடுக்கப்பட்டுள்ளது.
மஜுலி தீவில் சுமார் 1.70 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். காலநிலை மாற்றத்தால் உயரும் நீர் மட்டம் இந்தத் தீவை கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடித்து வருகிறது. இதனால், விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. மழை பெய்தால் அத்தீவு மக்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாவதால் பலரும் புலம் பெயரும் நடைமுறையையும் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மஜுலி தீவில்தான் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க மடம் ஒன்று உள்ளது. சுமார் 1,250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மடம் தற்போது அழிவு நிலையை எட்டியுள்ளது. ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு வெறும் 515 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான மடப்பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது.
பிரம்மபுத்திராவின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பலரும் வாழ்வாதாரம் இழந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் பார்க்க: தீபிகா படுகோனின் ‘சப்பக்’ திரைப்படத்தைக் காண ஒரு தியேட்டரையே புக் செய்த அகிலேஷ் யாதவ்! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.