சாலை திட்டத்திற்காக ரூ.33,000 கோடி வழங்கியுள்ளது எல்ஐசி : மக்களவையில் அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்

கோப்புப்படம்

எல்.ஐ.சி நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் 33 ஆயிரம் கோடி ரூபாயை நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக வழங்கியுள்ளதாக நிதி இணையமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மத்திய அரசின் பாரத் மாலா பரியோஜனா திட்டத்திற்கான நிதியாதார திரட்டலில் எல்.ஐ.சியின் பங்களிப்பு குறித்து மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், 2016-17, ஆண்டு மூன்று ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாயையும், 2019-20ம் ஆண்டில் 7,904 கோடி ரூபாயையும் எல்ஐசி நெடுஞ்சாலை திட்டங்களில் முதலீடு செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

  படிக்க..வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை  இதுகுறித்து பேசிய சு.வெங்கடேசன், தொழில் வளர்ச்சிக்கு அன்னிய முதலீடுகள், தனியார் முதலீடுகளே வழி வகுக்குமென்ற அரசின் நவீன தாராளமயப் பாதைக்கு எதிர் மாறான அனுபவத்தை எல்.ஐ.சி தந்துள்ளதாகக் கூறினார். எனவே, எல்.ஐ.சி முழுக்க முழுக்க அரசின் கைகளிலேயே நீடிக்க வேண்டும், பங்கு விற்பனை முயற்சிகளை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: