முகப்பு /செய்தி /இந்தியா / அதானி நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் : எல்ஐசி விளக்கம்

அதானி நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் : எல்ஐசி விளக்கம்

எல்ஐசி

எல்ஐசி

அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் குறித்து எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் குறித்து எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி பங்குகள் ஈக்விட்டி மற்றும் கடன் ஆகிய வகைகளில் 35 ஆயிரத்து 917 கோடியே 31 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதனை ஒரே காலகட்டத்தில் செய்யாமல் பலஆண்டுகளாக முதலீடு செய்துள்ளதாகவும், ஜனவரி 27ம் தேதி நிலவரப்படி எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்தில் செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 56 ஆயிரத்து 142 கோடியாக இருப்பதாகவும், மொத்த முதலீடுகளின் மதிப்பு 36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சம் ரூபாயாக உள்ளதாகவும் எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

எல் ஐசி நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 41 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு வெறும் 0.9விழுக்காடு மட்டுமே என்று எல்ஐசி விளக்கியுள்ளது.

First published:

Tags: Adani, LIC