சில தினங்களுக்கு முன்பு 4 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன்.13) மீண்டும் ஸ்ரீநகரில் உள்ள மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நாடிபோரா பகுதிக்குள் நுழைந்ததை அடுத்து மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மத்திய காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் ஓம்போரா பகுதியில் கடந்த ஜூன் 3ம் தேதி மாலை நான்கு வயது சிறுமி சிறுத்தையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஓம்போராவில் ஒரு ஹவுசிங் காலனியில் வசிக்கும் ஷாகில் அகமது என்பவரின் மகள் ஆதா ஷாகில் என அடையாளம் காணப்பட்ட சிறுமி தனது வீட்டின் வெளியே புல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த சிறுத்தை குழந்தையை கவ்வி சென்றது. மேலும் குழந்தையை எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வனவிலங்கு குழுக்கள் மற்றும் இராணுவம் அதிகாரி குழுக்கள் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
Also Read: இனி காங்கிரஸ் கட்சி தனித்தே தேர்தல்களை சந்திக்கும்: மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியில் விரிசல்?
இதையடுத்து வெள்ளிக்கிழமை(ஜூன்.4) காலை அருகிலுள்ள நர்சரியில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேடலை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கிருந்த உள்ளூர்வாசிகளிடம் விசாரித்த போது, அவர்கள் இரத்த அடையாளங்களைக் கண்டுபிடித்ததாக காவல்துறையிடம் தெரிவித்தனர். அதைக்கொண்டே சிறுத்தை சிறுமியை அழைத்துச் சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.
தேடல்களின் பிற்பகுதிகளில், அருகிலுள்ள நர்சரியில் சிறுமியின் உடல் பாகங்களைக் கண்டவுடன் அதிகாரிகளின் சந்தேகம் உறுதியானது. அடர்த்தியான வனப்பகுதி கொண்ட நர்சரிக்கு அருகில் காலனி அமைந்திருப்பதால் இப்பகுதியில் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுவது வழக்கம் என்று அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அதன் பிறகு சிறுத்தை, மனிதனை வேட்டையாடும் கொடிய மிருகமாக அறிவிக்கப்பட்டு, அதை பிடிக்க தொழில்முறை வேட்டைக்காரர்கள் பணியமர்த்தப்பட்டனர். மேலும், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க விலங்கைக் கண்டுபிடித்து அதைப் பிடிப்பதற்காக வனவிலங்குத் துறையின் ஒரு குழு நட்டிபோரா பகுதிக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் நேற்று (ஜூன்13) இரவு 10 மணியளவில் இந்த விலங்கு மீண்டும் நட்டிபோரா பகுதிக்குள் நுழைந்துள்ளது. சிறுத்தையை கண்டதும் அப்பகுதி மக்கள் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். விலங்கினை பிடித்து அதன் இயற்கை வாழ்விடத்திற்கு அனுப்பப்படும் வரை தேவையின்றி வெளியேற வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் சிறுத்தை இருப்பதைப் பற்றி உள்ளூர்வாசிகள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து, காஷ்மீர் பகுதியின் வனவிலங்கு வார்டன், ரஷீத் நகாஷ் கூறியதாவது, "எங்கள் அணிகள் இப்போது வனவிலங்கை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேரடி அல்லது மறைமுக ஆதாரங்கள் மூலம் இப்பகுதியில் விலங்கு இருப்பதை நிறுவ முயற்சிக்கிறோம். ஆனால் இதுவரை, இப்பகுதியில் விலங்கின் இருப்பை எங்களால் நிறுவ முடியவில்லை. எவ்வாறாயினும், நதிபோரா, ஹம்ஹாமா, சனாபோரா, சாண்ட் நகர் போன்ற பகுதிகள் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 10 கி.மீ.க்கு குறைவாகவே அமைந்துள்ளன. இதுவே சிறுத்தைகள் இந்த பகுதிகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jammu and Kashmir, Leopard