முகப்பு /செய்தி /இந்தியா / WATCH - நீதிமன்ற வளாகத்தில் புகுந்து பொதுமக்களை தாக்கிய சிறுத்தை.. அதிர்ச்சி வீடியோ!

WATCH - நீதிமன்ற வளாகத்தில் புகுந்து பொதுமக்களை தாக்கிய சிறுத்தை.. அதிர்ச்சி வீடியோ!

சிறுத்தை தாக்கும் காட்சி

சிறுத்தை தாக்கும் காட்சி

காசியாபாத் நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தை உலாவிய காட்சிகளும் பொதுமக்களை தாக்கிய வீடியோ காட்சிளும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ghaziabad, India

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்து தாக்கியதில் பலர் காயமடைந்தனர்.  உத்தர பிரதேசம் காசியாபாத் நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது. சிறுத்தையை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இந்த தகவலை அறிந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

4 மணி நேரத்திற்கு பின்னர் மயக்க மருந்து செலுத்தி சிறுத்தையை காப்பாற்றினர். இது தொடர்பாக பேசி காவல்துறை ஆணையர், சிறுத்தை தாக்கியதில் 6 பேர் காயமடைந்ததாக தெரிவித்தார்.காசியாபாத் நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தை உலாவிய காட்சிகளும் பொதுமக்களை தாக்கிய வீடியோ காட்சிளும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த தாக்குதலில் அங்கு இருந்த பொதுமக்கள் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ரத்த காயங்களுடன் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

.

First published:

Tags: Leopard, Uttar pradesh, Viral Video