ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

news18
Updated: August 10, 2018, 4:32 PM IST
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
சோனியா காந்தி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர்
news18
Updated: August 10, 2018, 4:32 PM IST
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. போர் விமானங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...