Home /News /national /

நாங்கள் இங்கு ஒற்றுமையாகதான் வாழ்கிறோம்.. அல்கொய்தாவுக்கு மாணவி முஸ்கான் தந்தை பதிலடி

நாங்கள் இங்கு ஒற்றுமையாகதான் வாழ்கிறோம்.. அல்கொய்தாவுக்கு மாணவி முஸ்கான் தந்தை பதிலடி

கர்நாடக மாணவி

கர்நாடக மாணவி

தேவையற்ற கவனத்தை எங்கள் குடும்பம் விரும்புவதில்லை. இது எங்களுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தேவையற்ற விவகாரங்களில் எங்கள் குடும்பத்தை இழுக்க வேண்டாம் என கர்நாடகா மாணவி முஸ்கானின் தந்தை அல்கொய்தாவுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்த உத்தரவை எதிர்த்து அம்மாநிலத்தில் போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த போராட்டங்களுக்கு எதிராக இந்து அமைப்புகளும் போட்டி போராட்டங்கள் நடத்தினர்.

    மாணவி முஸ்கானின் தீர செயல்

    இதன் காரணமாக அம்மாநிலத்தில் மத நல்லிணக்கம் சீர்குலைந்து அசாதாரண சூழல் ஏற்பட்டது.போராட்டத்தின் போது மாண்டியா என்ற பகுதியில் முஸ்கான் என்ற இஸ்லாமிய மாணவி ஒருவர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த நிலையில், அந்த பெண்ணை சூழ்ந்து இந்து அமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் அப்பெண்ணுக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர்.

    சற்றும் பயப்படாமல் முஸ்கானும் பதிலுக்கு அல்லா ஹு அக்பர் என கோஷம் எழுப்பினார். பெண்ணின் தைரியத்தை பாராட்டி பல்வேறு தரப்பினரும் அப்பெண்ணுக்கு ஆதரவாக துணை நின்றனர்.

    இந்நிலையில், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான அல்-ஜவாஹிரி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில்,முஸ்கானையும் அவரது தைரியமான செயலையும் பாராட்டினார்.

    முஸ்கான் தந்தையின் பதில்

    அல்கொய்த தலைவரின் இந்த பேச்சுக்கு மாணவி முஸ்கானின் தந்தை முகமது ஹுசைன் எதிர்வினை ஆற்றியுள்ளார்.ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "எனது மகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார். தேவையற்ற கவனத்தை எங்கள் குடும்பம் விரும்புவதில்லை. இது எங்களுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. ஜவாஹிரி என்ற நபரை நான் பார்ப்பது இதுவே முதல்முறை. நாங்கள் இங்கு அனைத்து மக்களுடனும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழ்கிறோம்.

    இந்தியா மீது சீனாவின் Cyber Attack... மின் விநியோக தகவல்களை திருட சீன ஹேக்கர்கள் முயற்சி..

    இவர்கள் எனது மகள் குறித்து பேசுவது தவறானது. இதுபோன்ற விவகாரங்களில் எங்களை இழுக்க வேண்டாம். இவர்கள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். எங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் வருவதாக புரளி கிளப்பப்படுகிறது. அதில் எந்த உண்மையும் இல்லை. அரசு வேண்டுமானால் விசாரணை செய்யட்டும். நாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணமே எங்களுக்கு போதுமானது" எனக் கூறினார்.

    உள்துறை அமைச்சர் பேட்டி

    இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என கர்நாடகா உள்துறை அமைச்சர் அர்கா ஞனேந்திரா தெரிவித்துள்ளார்.

    "மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில உள்துறை அமைச்சகம் இணைந்து அது குறித்து விசாரித்துவருகின்றனர். இந்த ஜிஹாப் விவகாரத்தில் அந்நிய சதி இருக்குமோ என்ற சந்தேகம் அரசுக்கு தொடர்ந்து இருந்துவருகிறது.உயர் நீதிமன்றமும் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. மத அடிப்படைவாதிகள் இதற்கு பின்னணியில் உள்ளதாக நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அல்கொய்தாவின் இந்த வீடியோ அதை உறுதிசெய்துள்ளது" என அமைச்சர் ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Hijab, Karnataka

    அடுத்த செய்தி