பிரமாண்டமான படேல் சிலையில் மழைநீர் கசிவு!

சிலையில் எந்த குறைபாடும் இல்லை என்றும் அதன் அமைப்பு காரணமாக காற்றால் மழைநீர் பார்வையாளர் மாடத்திற்கு வருவதாகவும் சிலை பராமரிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Web Desk | news18
Updated: July 1, 2019, 12:02 PM IST
பிரமாண்டமான படேல் சிலையில் மழைநீர் கசிவு!
படேல் சிலையில் மழைநீர் கசிவு
Web Desk | news18
Updated: July 1, 2019, 12:02 PM IST
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட சிலையில், மழைநீர் கசிவதாக புகார் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் மூவாயிரம் கோடி ரூபாய் செலவில், உலகில் மிக உயரமான சிலை அமைக்கப்பட்டது. தற்போது குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக சிலைக்குள் தண்ணீர் கசிவதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
153-வது அடி உயரத்தில் உள்ள பார்வையாளர் மாடத்தில், மழைநீர் கசிவதாக குற்றம்சாட்டிய சுற்றுலாப்பயணிகள், அதன் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டனர்.சர்தார் வல்லபாய் படேல் சிலை


இதற்கு பதிலளித்துள்ள சிலை பராமரிப்பு அதிகாரிகள், சிலையில் எந்த குறைபாடும் இல்லை என்றும் அதன் அமைப்பு காரணமாக காற்றால் மழைநீர் பார்வையாளர் மாடத்திற்கு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க...  ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்: மரண பீதி அடந்த பாஜக எம்பி

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...