உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்கவேண்டும்! தலைவர்கள் வலியுறுத்தல்

இது வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியத் தீர்ப்பு. பொதுமக்கள், அமைதி மற்றும் பொறுமையைக் காக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்கவேண்டும்! தலைவர்கள் வலியுறுத்தல்
இது வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியத் தீர்ப்பு. பொதுமக்கள், அமைதி மற்றும் பொறுமையைக் காக்க வேண்டும்.
  • News18
  • Last Updated: November 9, 2019, 12:24 PM IST
  • Share this:
அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின்கட்கரி, நிதிஷ்குமார் உள்ளிட்டவர்கள் வரவேற்றுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று வழங்கியது. அந்தத் தீர்ப்பில், ‘சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து அமைப்புகளுக்குச் சொந்தம் என்றும் அங்கே ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், சன்னி வஃக்பு வாரியத்துக்கு ஐந்து ஏக்கர் அளவில் மாற்று இடம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பு குறித்து தெரிவித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியத் தீர்ப்பு. பொதுமக்கள், அமைதி மற்றும் பொறுமையைக் காக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.


தீர்ப்பு குறித்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘எல்லோரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அமைதியை நிலைநாட்ட வேண்டும்’ என்று தெரிவித்தார். தீர்ப்பு குறித்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எல்லோரும் வரவேற்க வேண்டும். அதுதான் சமூக நல்லிணக்கத்துக்கு நல்லது. அதில், மேற்கொண்டு வேறு சர்ச்சைக்கள் இருக்கக் கூடாது. அதுதான் மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading