ஹோம் /நியூஸ் /இந்தியா /

'காங்கிரஸ் சரியான கட்சி இல்லை என நினைப்பவர்கள் வேறு கட்சியில் இணைந்து கொள்ளலாம்'.. அதிர் ரஞ்சன் சௌத்ரி..

'காங்கிரஸ் சரியான கட்சி இல்லை என நினைப்பவர்கள் வேறு கட்சியில் இணைந்து கொள்ளலாம்'.. அதிர் ரஞ்சன் சௌத்ரி..

அதிர் ரஞ்சன் சௌத்ரி

அதிர் ரஞ்சன் சௌத்ரி

காங்கிரஸ் சரியான கட்சி இல்லை என நினைப்பவர்கள், புதிய கட்சியை தொடங்கலாம் அல்லது வேறு கட்சியில் இணைந்துகொள்ளலாம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. தேர்தலில் காங்கிரசின் செயல்பாடுகள் குறித்து நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்த மூத்த தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் கட்சி தற்போது சரிவை சந்தித்து வருவதாகவும், சுயபரிசோதனைக்கான காலம் கடந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். காங்கிரஸ் தலைமை துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து, உண்மையான தொண்டர்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

  மேலும், தங்களது கருத்துக்களை தெரிவிக்க காங்கிரஸ் கட்சியில் உரிய மன்றம் இல்லை என்றும், எனவே தான் பொது வெளிக்கு வரவேண்டிய சூழல் நிலவுவதாகவும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்துள்ள மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி, காங்கிரஸ் சரியான கட்சி இல்லை என நினைப்பவர்கள் புதிய கட்சியை தொடங்கலாம் அல்லது வேறு கட்சியில் இணைந்துகொள்ளலாம் என கூறியுள்ளார்.

  கட்சி குறித்து பொது வெளியில் பேசி தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் சௌத்ரி கூறியுள்ளார். காந்தி குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டுள்ள அவர்கள் கட்சி மன்றங்களில் மட்டுமே தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தோல்வி குறித்து குறை கூறுபவர்கள் பீகார் தேர்தல் பரப்புரையின் போது எங்கிருந்தார்கள் என்றும் செளத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

  மேலும் படிக்க.. திமுக-வை போலவே 234 தொகுதியிலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் சர்வே எடுத்துள்ளோம்.. கார்த்திக் சிதம்பரம்..

  இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் கட்டமைப்பே இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் இதனை காட்டுவதாக சிதம்பரம் தெரிவித்துள்ளார். அடிமட்ட அளவில் கட்சி வலுவானதாக இருந்தால் சிறிய கட்சியாக இருந்தால் கூட வெற்றி பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பீகாரில் காங்கிரஸ் 45 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டிருக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: BJP, Congress, Kapil sibal, RahulGandhi, Sonia Gandhi