Home /News /national /

ரூ.20-ஐ திரும்ப பெற 22 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய வழக்கறிஞர் - நடந்தது என்ன?

ரூ.20-ஐ திரும்ப பெற 22 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய வழக்கறிஞர் - நடந்தது என்ன?

வழக்கறிஞர் துங்கநாத் சதுர்வேதி

வழக்கறிஞர் துங்கநாத் சதுர்வேதி

1999இல் வசூலித்த 20 ரூபாய்க்கு 22 ஆண்டுகளுக்குப் வட்டி போட்டு இழப்பீடு தொகையை அவரிடம் கொடுக்கச் சொல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    22 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பயணச்சீட்டு வாங்கிய போது 20 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டது என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு சட்ட போராட்டம் நடத்திய வழக்கறிஞருக்கு தற்போது நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு அவரின் நீண்ட நாள் உழைப்பிற்குக் கிடைத்த நிதியாக இருப்பினும் அது அவருக்குத் திருப்தியாக இல்லை.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் வசிக்கும் துங்கநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் 1999இல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து மொராதாபாத்துக்கு செல்ல ரயிலில் பயணித்துள்ளார். அப்போது அவரிடம் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஊழியர் ஒருவர் 20 ரூபாய் அதிகமாக வசூலித்துள்ளார். ஒரு டிக்கெட்டின் விலை 35 என்ற விதம் 2 டிக்கெட்க்கு 70 ரூபாய் வசூலிக்காமல் டிக்கெட் முன்பதிவு ஊழியர் 90 ரூபாய் வசூலித்துள்ளார். இதனை எதிர்த்து கேள்வி கேட்ட போது அவருக்கு அப்போது நீதி கிடைக்கவில்லை.எனவே இந்த ஊழல் சம்பவத்தை நீதிமன்றம் கொண்டு சென்றார்.

    மதுராவிலுள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் கோரக்பூர் ரயில்வே மற்றும் அதிக கட்டணம் வசூலித்த ஊழியர் மேல் வழக்குப் பதிவு செய்தார். விசாரணையும் தொடங்கியது ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல 22 வருடம் கழித்து தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

    Also Read : இமாச்சலில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. நிலச்சரிவில் இடிந்து விழுந்த பாலம்- வைரலாகும் காட்சிகள்

    துங்கநாத் சதுர்வேதி கடந்த 22 வருடமாய் போராடி வாங்கிய தீர்ப்பில் அவருக்கு வெற்றியே கிடைத்தது. 1999இல் வசூலித்த 20 ரூபாய்க்கு 12% வட்டி 22 ஆண்டுகளுக்குப் போட்டு 15,000 ரூபாய் இழப்பீடு தொகையை அவரிடம் கொடுக்கச் சொல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.அதனை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வட்டி விகிதம் 15% சதவீதமாக மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளனர்.



    இந்த சட்ட போராட்டத்தைப் பற்றி வழக்கறிஞர் துங்கநாத் சதுர்வேதி கூறியபோது, இந்த வழக்கில் கடந்து வந்த பாதை எளிதாக அமைய வில்லை என்றும், இத்தனை வருடப் போராட்டத்தில் தற்போது கிடைத்த தீர்ப்பு எனக்கு பெரியதாகச் சமாதானத்தைத் தரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த வழங்கினால் அவருக்கு ஏற்பட்ட மன வேதனையே அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

    Also Read : தேசிய கொடி ஏற்றதா வீடுகளை கவனித்து எனக்கு புகைப்படம் அனுப்புங்கள்.. சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்

    இந்த வழக்கில் அவரே வழக்கறிஞராக ஆஜராகி வெற்றி பெற்றுள்ளார். ரயில்வே இந்த வழக்கை நுகர்வோர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்ய முயன்றதாகவும், ரயில்வே தீர்ப்பாயத்தில் இதனைப் பற்றி புகார் தெரிவிக்கக் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி நுகர்வோர் நீதிமன்றத்தில் தற்போது இழப்பீடு பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Consumer, Corruption case, Train ticket

    அடுத்த செய்தி