உ.பி பார் கவுன்சில் தலைவரை சுட்டுக்கொலை செய்த வழக்கறிஞர்!

முதல் கட்ட விசாரணையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

news18
Updated: June 13, 2019, 7:26 AM IST
உ.பி பார் கவுன்சில் தலைவரை சுட்டுக்கொலை செய்த வழக்கறிஞர்!
பர்வேஷ் யாதவ்
news18
Updated: June 13, 2019, 7:26 AM IST
உத்தரப்பிரதேச மாநில பார் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2 நாட்களே ஆன நிலையில், பர்வேஷ் யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநில பார் கவுன்சில் தலைவராக பர்வேஷ் யாதவ் என்ற பெண் வழக்கறிஞர் இரண்டு நாட்களுக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று மாலை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கறிஞரான அரவிந்த்குமார் மிஸ்ராவின் அறையில் அமர்ந்து மற்றொரு வழக்கறிஞர் மனீஷ் சர்மா என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மனீஷ் சர்மா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பர்வேஷ்யாதவை கண்மூடித்தனமாக சுட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பர்வேஷ் யாதவ் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மனிஷ் சர்மா தற்கொலைக்கு முயன்றார். இதில் காயம் அடைந்து அவர் உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல் கட்ட விசாரணையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

First published: June 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...