• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஹாரன்களுக்கு இந்திய இசைக் கருவி சத்தங்கள் மட்டுமே பயன்படுத்த சட்டம்- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

ஹாரன்களுக்கு இந்திய இசைக் கருவி சத்தங்கள் மட்டுமே பயன்படுத்த சட்டம்- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நிதின் கட்கரி

நிதின் கட்கரி

இந்திய இசைக் கருவிகளின் சத்தம் மட்டுமே வாகனங்களில் கேட்கும்படி சட்டத் திருத்தம் கொண்டுவரப் படும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில், நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்களில் ஒலிக்கும் சைரன்களின் சத்தம் மிகவும் எரிச்சலூட்டுகிறது. குறிப்பாக அமைச்சர்களின் வாகனங்கள் சாலைகளில் கடக்கும் போது ஒலியின் அளவை அதிகபட்சத்தில் வைத்துவிடுகின்றனர். இதுபோன்ற சத்தங்கள் காதுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

    அதனால், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்களில் ஒலிக்கும் சைரன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு காதுக்கு இனிமையான ஒலியை பொருத்த முடிவு செய்துள்ளோம். அதாவது அகில இந்தியா வானொலியில் உள்ள இசை போன்று இருக்குமாறு ஆய்வு செய்து வருகிறோம். இந்திய வானொலி காலையில் ஒலிபரப்பைத் தொடங்கும் போது காதுகளுக்கு இனிமையான இசை ஒலிக்கப்படும். அந்த இசை போன்று ஆம்புலன்ஸ் சைரன் இருக்குமாறு யோசித்து வருகிறேன்.

    தற்போதுள்ள சைரன் ஒலியும், அமைச்சர்கள் அதிகாரிகள் செல்லும்போது ஒலிக்கவிடும் சைரன் ஒலியும் வெறுப்பாக இருக்கிறது. இந்திய இசைக்கருவிகளான புல்லாங்குழல், வயலின், மவுத் ஆர்கன், ஹார்மோனியம் ஆகியவற்றின் இசை மூலம் ஹாரன் ஒலி அமைக்குமாறு ஆய்வு செய்து வருகிறோம். இந்தியாவில் ஹாரன்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்கவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கும் வகையில் ஒரு புதிய சட்டம் இயற்றப்படும்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: