உச்ச நீதிமன்றத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகரிக்கும் நீதிபதிகள் எண்ணிக்கை!

உச்ச நீதிமன்றத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகரிக்கும் நீதிபதிகள் எண்ணிக்கை!
உச்ச நீதிமன்றம் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: September 19, 2019, 1:04 PM IST
  • Share this:
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 4 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதிகளை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இமாச்சலப்பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.ராமசுப்பிரமணியன், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் கடந்த 2006-ம் ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். பின்னர் ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், பதவிஉயர்வு பெற்று இமாச்சலப்பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறார்.


முன்னதாக, ராமசுப்பிரமணியத்துக்கு பதவிஉயர்வு வழங்க உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் உடன் பணியாற்றியவர் என்ற அடிப்படையில் பானுமதியிடம் தலைமை நீதிபதி கருத்து கேட்டிருந்தார். அதற்கு பதவிமூப்பு அடிப்படையில், மூத்தவரான மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமலிங்கம் சுதாகரை மீறி, ராமசுப்பிரமணியத்துக்கு பதவிஉயர்வு வழங்கக் கூடாது என்று பானுமதி தெரிவித்திருந்தார். 4 புதிய நீதிபதிகள் பதவியேற்க உள்ளதால் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக 34 ஆக உயருகிறது.

First published: September 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்