சபரிமலை விவகாரம்; அயோத்தி நில விவகாரம் - உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட அமைச்சர் கேள்வி
சபரிமலை விவகாரம்; அயோத்தி நில விவகாரம் - உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட அமைச்சர் கேள்வி
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
சபரிமலை கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடிகிறபோது, ராம்ஜென்ம பூமி தொடர்பான வழக்கு ஏன் 70 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்ற அகில பாரதிய அதிவக்டா பரிஷத் 15-வது தேசிய மாநாட்டில் மத்திய சட்டஅமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘என்னுடைய சக்தியைப் பயன்படுத்தி, அயோத்தி ராம்ஜென்ம பூமி நிலம் தொடர்பான விவகாரத்தில் விரைந்து தீர்ப்பளிக்கவேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளேன்.
சபரிமலை கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடிகிறபோது, ராம்ஜென்ம பூமி தொடர்பான வழக்கு ஏன் 70 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. நாம் எதற்காக பாபரை வழிபட வேண்டும். அரசியலைமைப்புச் சட்டத்தில் ராமர், கிருஷ்ணா, அக்பரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பாபரைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், நாம் இதைப் பற்றி இந்த நாட்டில் பேசினால் வேறுவிதமான சர்ச்சைகள் எழும்’ என்று தெரிவித்தார்.
அந்த மாநாட்டில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா, அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாதுர் ஆகியோரும் கலந்துகொண்டனர். அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 4-ம் தேதி முதல் விசாரணைக்கு வரவுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.