உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே குறித்து உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்தும் ட்விட்டரில் பதிவிட்ட பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், நீதித்துறை மீதான விமர்சனங்கள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கட்டுரை எழுதியுள்ளார். அதில், ‘பொதுநல வழக்குகளை பதிவு செய்தல், பின்னர் எந்த வகையான தீர்ப்பை அளிக்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் தொடர் பிரச்சாரத்தை முன்னெடுப்பது, இறுதித் தீர்ப்பு அவர்கள் விரும்பிய வகையில் இல்லையென்றால் மீண்டும் வெறுப்பு பிரச்சாரத்தை தொடங்கவேண்டியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அவர்களுடைய வழக்கறிஞர்களால் மேற்கொள்ளப்படும் அரசியல் குற்றச்சாட்டுகள், சமீப காலங்களில் சுதந்திரமான நீதித்துறையின் மீது விழுந்த கறை.
இத்தைகய மனப்போக்கு சமீபகாலங்களில் நீதித்துறையின் சுதந்திரதுக்கு வந்துள்ள மிகப்பெரிய சவாலாக வளர்ந்துவருகிறது. நீதித்துறையின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான பொதுஅவசரம் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த பா.ஜ.க தலைவர்களுக்கு இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.