மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்படவேண்டும்! ஆளுநர் திரிபாதி குற்றச்சாட்டு

அவரிடம் நிதானம் வேண்டும். சமயங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார். இதை அவர் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

news18
Updated: July 28, 2019, 3:28 PM IST
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்படவேண்டும்! ஆளுநர் திரிபாதி குற்றச்சாட்டு
கேசரி நாத் திரிபாதி
news18
Updated: July 28, 2019, 3:28 PM IST
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை மேம்படுத்தவேண்டும் என்று அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநரான கேசரிநாத் திரிபாதியின் பதவிக்காலம் 23-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இருப்பினும், அம்மாநிலத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. மம்தா பானர்ஜி தலைமையில், திரிணாமுல் காங்கிரஸ் 2011-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்துவருகிறது.

2014-ம் மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட கேசரிநாத் திரிபாதிக்கும், மம்தா பானர்ஜிக்கு தொடக்கம் முதலே மோதல் போக்கே நிலவி வருகிறது. இருவரும், பொதுவெளியில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யும் நிலையும் உருவாகியுள்ளது. இந்தநிலையில், ஆளுநர் பதவிக் காலம் நிறைவடையுள்ளநிலையில், மேற்கு வங்க நிலவரம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘மம்தா பானர்ஜியிடம் தொலைநோக்குப் பார்வை உள்ளது. தனது முடிவுகளை நடைமுறைப்படுத்த அவருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவரிடம் நிதானம் வேண்டும். சமயங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார். இதை அவர் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.


அவரது சமரசக்கொள்கை, சமூக நல்லிணக்கத்தை மோசமாக பாதிப்பதாக உள்ளது. எல்லா குடிமக்களையும் அவர் சமமாக நடத்த வேண்டும். பாரபட்சம் காட்டக்கூடாது. அவர் பாரபட்சம் காட்டுகிறார். அவரது அறிக்கைகளே அதை காட்டுகின்றன. சட்டம் ஒழுங்கும் மற்றும் கல்வியில் முன்னேறம் தேவைப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு நிலையை முன்னேற்ற முடியும். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வந்தால், கல்வித்துறை, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பாதுகாப்பது, தொழிற்துறை ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்படும். மேற்குவங்கத்தில் என்னுடைய ஐந்து ஆண்டு ஆட்சி காலம் இனிமையானதும், அதிருப்தியானதும் சேர்ந்தது’ என்று தெரிவித்தார்.

Also see:

Loading...

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...