புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு மீண்டும் ஒத்திவைப்பு.... உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி போட்டி ஏற்பாடுகள் செய்யப்படாததால் மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுப்பு..
ஜல்லிக்கட்டு போட்டிகளை இன்றே நடத்த வலியுறுத்தி தஞ்சங்குறிச்சி விழாக் குழுவினர் போராட்டம்..... வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருவாதிரை விழாவையொட்டி நெல்லையப்பர் கோயிலில் நடராஜ பெருமாளுக்கு திருநீராட்டு விழா..... விடிய, விடிய சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
திமுகவினர் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல..... மதவாதத்திற்கு எதிரானவர்கள்.... இந்து சமய அறநிலையத்துறை விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!
அதிமுக பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் அடைய ஈபிஎஸ் முயற்சிப்பதாக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்.
பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி விசாரணை.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருதரப்பினர் மோதலால் திறக்கப்படாத ஹெத்தையம்மன் கோயில். பண்டிகை நாளில் சாமி தரிசனம் செய்ய முடியாததால் கண்ணீர் விட்டுக் கதறிய பழங்குடியின பெண்கள்
மக்களின் நலன் கருதி டாஸ்மாக் மதுபான விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்... தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை
சென்னையில் 46வது சர்வதேச புத்தக கண்காட்சி இன்று தொடக்கம். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை என அண்ணாமலை பேட்டி. நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என விளக்கம்
தமிழ்நாடு, தமிழன், தமிழ் ஆகிய மூன்றும் ஆளுநருக்கு பிடிக்கவில்லை - திமுக எம்பி டி.ஆர்.பாலு காட்டம்
சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை அடுத்தாண்டு மார்ச்சில் நிறைவு பெறும் - பணிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த பின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம். ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் நேற்றிரவு மிதமான நிலநடுக்கம்.. தலைநகர் டெல்லியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்
அதீத கனமழையால் மேற்கு ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு.. நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது இலங்கை... அக்சர் படேல், சூர்யகுமாரின் அதிரடி ஆட்டம் கைகொடுக்கவில்லை
இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்தார் தமிழகத்தின் பிரனேஷ். 5 வயதில் ஆரம்பித்த சதுரங்க பயணத்தின் புதிய மைல்கல்லை 15 வயதில் எட்டினார்
செப்டம்பரில் நடைபெறுகிறது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி.. ஒரே குரூப்பில் இடம்பெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headlines