Home /News /national /

'சிவாஜி கணேசன் என் அண்ணனைப் போன்றவர்' - வைரலாகும் லதா மங்கேஷ்கரின் பதிவு

'சிவாஜி கணேசன் என் அண்ணனைப் போன்றவர்' - வைரலாகும் லதா மங்கேஷ்கரின் பதிவு

சிவாஜி கணேசனின் ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி (அக்டோபர் 1)லதா மங்கேஷ்கர் சமூக வலைதளங்களில் வாழ்த்து சொல்ல தவறியது இல்லை.

சிவாஜி கணேசனின் ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி (அக்டோபர் 1)லதா மங்கேஷ்கர் சமூக வலைதளங்களில் வாழ்த்து சொல்ல தவறியது இல்லை.

சிவாஜி கணேசனின் ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி (அக்டோபர் 1)லதா மங்கேஷ்கர் சமூக வலைதளங்களில் வாழ்த்து சொல்ல தவறியது இல்லை.

    முதுபெரும் பாடகி பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் இன்று மறைந்த நிலையில், சிவாஜி கணேசன் குறித்த அவரது பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த லதா மங்கேஷ்கருக்கு கடந்த சில வாரங்களாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையொட்டி 2 நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்... மருத்துவமனையில் உயிர் பிரிந்தது




    லதா மங்கேஷ்கரை விட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு வயது மூத்தவர். இருவரும் சம காலத்து கலைஞர்கள் என்பதால், சிவாஜி கணேசன், லதா மங்கேஷ்கர் இடையே நல்ல நட்புறவு இருந்துள்ளது. சிவாஜி கணேசனின் ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி (அக்டோபர் 1)லதா மங்கேஷ்கர் சமூக வலைதளங்களில் வாழ்த்து சொல்ல தவறியது இல்லை.



    கடந்த ஆண்டு லதா மங்கேஷ்கர் தனது ஃபேஸ்புக் பதிவில், 'நேற்று சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள். நான் அவரை அண்ணா என்றுதான் எப்போதும் அழைப்பேன். அவர் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற பொக்கிஷம். அவர் என்னை தங்கையாக ஏற்றுக் கொண்டதை நான் பெற்ற பாக்கியமாக கருதுகிறேன். அவரது மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு, அவர்களது சகோதரிகள் என்மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர். அவர்களின் வழியே நான் சிவாஜி அண்ணனும், கமலா அண்ணியும் என்னுடன் இருப்பதை உணர்கிறேன். சிவாஜி கணேசன் என்ற இந்த மாபெரும் கலைஞருக்கு எனது கூப்பிய கரங்களுடன் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு லதா மங்கேஷ்கர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க : லதா மங்கேஷ்கர் மறைவு.. நாடு முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..



    அதற்கு முந்தைய ஆண்டு பிறந்த நாள் பதிவில், 'வணக்கம். சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பம் எனக்கு மிகவும் நெருக்கமானது. எனக்கும் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் இடையிலான உறவு அண்ணன் - தங்கை உறவைப் போன்றது. அவரது பிறந்த நாளான இன்று, மிகுந்த பணிவன்புடன் அவருக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    லதா மங்கேஷ்கரின் இந்த பதிவுகள் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Lata Mangeshkar

    அடுத்த செய்தி