ஹோம் /நியூஸ் /இந்தியா /

'இந்தியாவின் மிகவும் நேசிக்கப்பட்ட குரலை இழந்து நிற்கிறோம்' - லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

'இந்தியாவின் மிகவும் நேசிக்கப்பட்ட குரலை இழந்து நிற்கிறோம்' - லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

Lata Mangeshkar : நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா, தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகளையும் லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவின் முதுபெரும் பாடகியும், பாரத ரத்னாவுமான லதா மங்கேஷ்கர் தனது 92 வது வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், 'பல ஆண்டுகளாக இந்தியாவின் மிகவும் நேசிக்கப்பட்ட குரலை நாம் இழந்து நிற்கிறோம். அவரது பொன்னான குரலுக்கு அழிவு என்பதே கிடையாது. லதாவின் குரல் அவரது ரசிகர்களின் இதயங்களில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்' என்று கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், தனது பாட்டி இந்திரா காந்தியுடன் லதா மங்கேஷ்கர் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் 'இந்தியாவின் கலை உலகில் லதா மங்கேஷ்கரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இந்த துயரத்தை தாங்கிக் கொள்வதற்கு அவருடைய குடுபத்திற்கு இறைவன் சக்தியை அளிக்கட்டும்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்... மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தனது இரங்கல் பதிவில், 'லதா மங்கேஷ்கரின் மறைவை அறிந்து நானும் எனது மனைவியும் துயரத்திற்கு ஆளானோம். தனது குரல் வளத்தால் இந்தியாவுக்கு பெருமைகளை லதா மங்கேஷ்கர் தேடித் தந்துள்ளார். இசை ரசிகர்களின் இதயங்களில் லதா மங்கேஷ்கர் எப்போதும் நிறைந்திருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைவதற்காக இறைவனை பிரார்த்திக்கிறோம்.' என்று கூறியுள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில், 'உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களைப் போல, நானும் அவரது பல பாடல்களை உருகி கேட்டிருக்கிறேன். இசை உலகின் பிரமாண்டமாக லதா மங்கேஷ்கர் இருந்தார். அவரது மறைவால் வாடும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று கூறியுள்ளார்.

இதேபோன்று பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Lata Mangeshkar