முழு அரசு மரியாதையுடன் பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் உடல் மும்பை சிவாஜி பார்க்கில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் பிரதமர்
மோடி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பாலிவுட் நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமிதாப் பச்சன், அனுபம் கேர், ஜாவித் அக்தர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோர் லதா மங்கேஷ்கரின் இல்லத்திற்கு வந்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்... மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
முன்னதாக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர், லதாவின் பிரபுகஞ்ச் இல்லத்தில் இருந்து அவரது உடலை சுமந்தவாறு வாகனம் சிவாஜி மைதானத்தை நோக்கி கிளம்பியது.
செல்லும் வழியெல்லாம் பொதுமக்கள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். லதா மங்கேஷ்கரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மூவர்ண கொடியால் சூழப்பட்டிருந்தது.
பாரத் ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட ஏராளமான விருதுகளை லதா மங்கேஷ்கர் வாங்கி குவித்துள்ளார். 1962-ம் ஆண்டு சீனப்போரில் இந்திய வீரர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்தனர். அவர்கள் நினைவை போற்றும் வகையில், 'ஏ மேறே வதன் கே லோகோ' என்ற நாட்டுப்பற்று மிக்க பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார்.

இறுதி சடங்கின்போது மரியாதை செய்யும் பிரதமர் மோடி
பாரம்பரிய இசைக் குடும்பத்தை சேர்ந்த லதா மங்கேஷ்கர் தனது 13ம் வயதில் இருந்து பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் குரல் என்று லதா பரவலாக பாராட்டப்படுகிறார்.
இதையும் படிங்க ;
லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி!
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.