ஹோம் /நியூஸ் /இந்தியா /

லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்த நாளில் நினைவு சின்னமானது 40 அடியில் வீணை..!

லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்த நாளில் நினைவு சின்னமானது 40 அடியில் வீணை..!

லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர்

Lata mangeshkar | அவரது நினைவாக அதே சாலையில் நிறுவப்பட்டுள்ள 14 டன் எடையுள்ள 40 அடி வீணை சிலையையும் காணொலி வாயிலாக இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Ayodhya | Uttar Pradesh

  பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளில் அவரது நினைவாக அயோத்தி சாலையில் அமைக்கப்பட்டுள்ள 40 அடி வீணையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைக்கிறார்.

  பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் குரலுக்கு மயங்காத ஆட்கள் யாருமே இல்லை. அப்படிப்பட்ட குரல் கடந்த பிப்ரவரி மாதம் காற்றோடு கலந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இந்த நிலையில், நேற்று அவர் விண்ணுலகம் சென்ற பிறகு கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் ஆகும்.  உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் லதா மங்கேஷ்கரின் நினைவாக புதிய குறுக்கு சாலை அமைக்கப்படும் என்றும் அவரது நினைவை போற்றும் வகையில் புதிய குறுக்கு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை பிறப்பித்த உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதற்கான கட்டுமான பணிகளுக்கும் உத்தரவிட்டார். இதன்படி, அந்த சாலை உருவானது. அதற்கு, லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளான நேற்று அவரது பெயர் சூட்டப்படுகிறது.

  ALSO READ | பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்துக்கு தடை... காரணம் என்ன?

  இதனையொட்டி, பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை அவரை நினைவுகூர்கிறேன். நான் நினைவு கூருவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. அந்த அளவிற்கு என் மீது பாசம் காட்டியுள்ளார். இன்று அயோத்தியில் உள்ள ஒரு சவுக்கிற்கு அவரது பெயர் சூட்டப்படுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் தலைசிறந்த ஒருவருக்கு பொருத்தமான அஞ்சலி செலுத்துவதாக கருதுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

  மேலும், அவரது நினைவாக அதே சாலையில் நிறுவப்பட்டுள்ள 14 டன் எடையுள்ள 40 அடி வீணை சிலையையும் காணொலி வாயிலாக  பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Birthday, Lata Mangeshkar, Modi, PM Modi