மூணாறில் நள்ளிரவில் நிலச்சரிவு.. கடைகள் வாகனங்கள் நிலத்தில் புதைந்தது
மூணாறில் நள்ளிரவில் நிலச்சரிவு.. கடைகள் வாகனங்கள் நிலத்தில் புதைந்தது
மூணாறில் நிலச்சரிவு...
land sliding in Munnar kerala | கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் நிலச்சரிவு ஏர்பட்டது. இதில் ஒரு கோயில் மற்றும் இரண்டு கடைகள் நிலச்சரிவில் மண்ணில் புதைந்தன. ஆனால் இரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் உயிர்சேதம் ஏதும் இல்லை.
இடுக்கி மாவட்டம் மூணாறு குண்டலா எஸ்டேட் புதுக்குடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இரண்டு கடை அறைகள், ஒரு கோவில் மற்றும் ஒரு ஆட்டோ ரிக்க்ஷா ஆகியவை பூமிக்கு அடியில் புதைந்தன. இரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவில் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் தவிர்க்கபட்டது.
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இக்குழுவினர் 141 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேரை இடமாற்றம் செய்து முகாமில் சேர்த்தனர். இரவில் அவ்வழியாக வாகனங்களில் வந்த மக்கள் மண்சரிந்து சாலையில் விழுந்து கிடப்பதை பார்த்தனர்.
இவர்கள் தகவல் அளித்ததையடுத்து, அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. மண், கற்கள் குவித்து வட்டவாடா-மூணாறு சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் வட்டவாடா முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சாலையில் குவிந்த மண்ணை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே சாலையின் நிலை குறித்து கூற முடியும் என்றும் அந்த பகுதி எம்எல்ஏ தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.