சச்சின் டெண்டுல்கரின் மனைவி, நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட வி.ஐ.பிகளிடம் நில மோசடி - கட்டுமான நிறுவனத்திற்கு நெருக்கடி

கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் மனைவி, நடிகைகள் நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட வி.ஐ.பிகளிடம் ஆசை வார்த்தை காட்டி நிலமோசடி செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மோசடி அம்பலமானது எப்படி?

  • Share this:
ஹைதராபாத், பெங்களூருவில் நீர் நிலைகளை ஒட்டி தனி வீடுகள் கட்டலாம்.. பல கோடி மதிப்புள்ள வீட்டுமனைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம் என பிரம்மாண்டமாக விளம்பரம் செய்த ஆதித்யா நில விற்பனை நிறுவனம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆதித்யா நில விற்பனை நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கோட்டா ரெட்டிக்கும், அவரது கூட்டாளியும் உறவினருமான சுதிர் ரெட்டிக்கும் இடையே வெடித்த மோதலே இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளது.

2008 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கருக்கு 6 ஏக்கர் நிலத்தை ஆதித்யா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதேபோல், நடிகை நயன் தாராவிற்கும் ஏக்கர் கணக்கில் நிலத்தை விற்றுள்ளது ஆதித்யா நிறுவனம்


நடிகை ரம்யாகிருஷ்ணனும் விளம்பரத்தை நம்பி ஆதித்யா நிறுவனத்திடம் இருந்து 2 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். சினிமா, விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என வி.ஐ.பிக்கள் 25 பேரை குறிவைத்து சுமார் 40 ஏக்கர் நிலங்களை விற்பனை செய்தது ஆதித்யா நிறுவனம்.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், வி.ஐ.பிக்கள் வாங்கியுள்ள நிலத்தில் கட்டுமானம் செய்ய முடியாது. ஏனென்றால், அவை நீர்நிலை புறம்போக்கு என்று தற்போது அம்பலமாகியுள்ளது. அந்த நிலங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டதைப் பார்த்த உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள், உடனே பணிகளை நிறுத்தச் சொல்லி, ஆதித்யா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதில் தொடங்கிய மோதல், ஆதித்யா நிறுவனத்தின் உரிமையாளார்களுக்கிடையே சண்டை ஏற்பட காரணமானது. விவசாயிகளிடம் இருந்து ஒரு ஏக்கர் நிலத்தை 5 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய ஆதித்யா நிறுவனம், வி.ஐ.பிக்களுக்கு அதே ஒரு ஏக்கர் நிலத்தை 1 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஹைதராபாத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய நிலம், சுமார் 3000 ஏக்கர் சாகுபடிக்குத் தேவையான மழைநீர் பிடித்து வைக்கும் ஆதாரம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்த கோட்டா ரெட்டி, தனது துப்பாக்கி மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மனைகளின் பத்திரங்களை உறவினர் சுதிர் ரெட்டி திருடிவிட்டதாக கடந்த வாரம் புகார் அளித்துள்ளார்.

 

 

மேலும் படிக்க...

ஆடுகளுக்கும் மாஸ்க் போடவேண்டும் - ஆடு மேய்பவரை மிரட்டி அனுப்பிய காவல்துறை - வீடியோ

இதனால் இரு தரப்புக்கு இடையே நடக்கும் வார்த்தைப் போரில் அடுத்தடுத்து முறைகேடுகள் அம்பலமாகி வருகின்றன. மோசடி குறித்து வி.ஐ.பிக்கள் புகார் அளிப்பார்களா? நில மோசடி விவகாரத்தில் திருப்பம் ஏற்படுமா?
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading