Home /News /national /

குழந்தைகளை குறிவைத்து பரவி பாதிக்கும் தக்காளி காய்ச்சல்.. சர்வதேச நிறுவனம் ஆய்வறிக்கை

குழந்தைகளை குறிவைத்து பரவி பாதிக்கும் தக்காளி காய்ச்சல்.. சர்வதேச நிறுவனம் ஆய்வறிக்கை

இந்தியாவில் தக்காளி காய்சல் பரவல் குறித்து லேன்செட் நிறுவனம் அறிக்கை

இந்தியாவில் தக்காளி காய்சல் பரவல் குறித்து லேன்செட் நிறுவனம் அறிக்கை

இந்தியாவில் ஏற்பட்டுள்ள தக்காளி காய்ச்சல் குறித்து சர்வதேச மருத்துவ நாளிதழான லேன்செட் அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
    இந்தியாவில் கோவிட்-19, குரங்கம்மை போன்ற தொற்றுகள் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், புதிதாக குழந்தைகளிடையே பரவும் தக்காளி காய்ச்சல் என்ற நோய் பாதிப்பு அடுத்த பீதியை கிளப்பியுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த தக்காளி காய்ச்சல் குறித்து சர்வதேச மருத்துவ நாளிதழான லேன்செட் அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தக்காளி காய்ச்சல் என்பது கை, பாதம் மற்றும் வாய் நோய் (HFMD) என அழைக்கப்படுகிறது, இது ஒரு அரிய வைரஸ் நோயாகும், இது உடல் முழுவதும் சொறி மற்றும் கொப்புளங்களை உண்டாக்க கூடியது. உடலில் தோன்றும் கொப்புளங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு வடிவத்திலும் நிறத்திலும் தக்காளியை ஒத்திருப்பதால், இந்த காய்ச்சல் தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் தக்காளி காய்ச்சல் பரவல் குறித்து லான்செட் நிறுவன அறிக்கையில் கூறியதாவது, இந்த காய்ச்சல் முதல் முதலாக கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் பதிவான நிலையில், இதுவரை 82 குழந்தைகள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த காய்ச்சல் பரவியுள்ள நிலையில், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவையும் உஷார் நிலையில் உள்ளன.

    தக்காளி காய்ச்சலானது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நோய் உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றாலும், மிகப்பெரிய தொற்று நோயாக கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: புதிய கார் வாங்கக் கூடாது, தொண்டர்கள் காலில் விழ அனுமதிக்கக் கூடாது.. அமைச்சர்களுக்கு காறர் உத்தரவுகளை பிறப்பித்த தேஜஸ்வி!

    மனித உடலில் தக்காளி வடிவில் இருக்கும் காயங்களில் இருந்து நீர் வடியும். மேலும், வாயின் உள்பகுதியில் கடும் எரிச்சல் ஏற்படும் என்பதால் குழந்தைகள் சாப்பிடுவதில் சிரமங்களை ஏற்படுத்தும். இந்த காய்ச்சல் எளிதில் மற்றொருவருக்கு பரவக் கூடியதாகும். இந்த நோய் பாதித்தவர்கள் 5 முதல் 7 நாட்கள் தனிமைபடுத்திக்கொண்டு, திரவ வகைகள் உணவுகள் அதிகம் உட்கொள்ள வேண்டும். அதேபோல், நோயில் இருந்து விரைவாக மீள்வதற்கு அதிக நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Kerala, Tomato Fever

    அடுத்த செய்தி