Home /News /national /

உலகளவில் ஆண்டிபயோடிக் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்ளும் இந்தியர்கள் - ஆய்வில் தகவல்

உலகளவில் ஆண்டிபயோடிக் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்ளும் இந்தியர்கள் - ஆய்வில் தகவல்

உலக அளவில் இந்தியர்களே அதிக அளவில் ஆண்டிபயோடிக் மாத்திரைகளை உட்கொள்வதாக பிரபல மருத்துவ இதழான லான்செட் தகவல் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் இந்தியர்களே அதிக அளவில் ஆண்டிபயோடிக் மாத்திரைகளை உட்கொள்வதாக பிரபல மருத்துவ இதழான லான்செட் தகவல் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் இந்தியர்களே அதிக அளவில் ஆண்டிபயோடிக் மாத்திரைகளை உட்கொள்வதாக பிரபல மருத்துவ இதழான லான்செட் தகவல் வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    லான்செட் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வு தகவலில் இந்தியர்கள் உட்கொள்ளும் ஆண்டிபயோடிக் மாத்திரைகளில் பெரும்பாலானவை, மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறையால் அங்கீகரிக்கப்படாதவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறிப்பிடத்தக்க கொள்கை மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருந்து கொள்கையில் உள்ள முரண்பாடுகள் ஆண்டிபயோடிக் மாத்திரைகள் எளிதாக கிடைக்க வழி புரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில், CDSCO எனப்படும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையமும் மாநில அளவிலான மாநில மருந்து ஒழுங்குமுறை ஆணையமும் மருந்துகளை விநியோகிக்கின்றன. இதன் மூலம் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி இன்றியே, மாநில அரசுகளும் மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கின்றன.

    கொரோனா காலக்கட்டத்தில் இந்தியர்கள் அதிக அளவில் எரித்ரோமைசின் மாத்திரையை பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. 2019 -ல் மட்டும் இந்தியர்கள் 5 ஆயிரத்து 71 மில்லியன் வரையறுக்கப்பட்ட தினசரி டோஸ்களை எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆயிரம் பேருக்கு 10 புள்ளி 4 சதவிகிதமாகும்.மருத்துவர்களால் இரண்டாவது  தேர்வு மருந்தாக பரிந்துரைக்கப்படும் அதிக எதிர்ப்பு திறன் கொண்ட ஆண்டிபயோடிக் மாத்திரைகள் 54 புளளி 9 சதவித பேர் உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான மாத்திரைகள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் இருந்து வாங்கப்படுவதாகவும், இதற்கு சரியான கண்காணிப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மருந்துகள் மற்றும் மருந்து கலவைகளின் விற்பனையை கட்டுப்படுத்த இந்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Read more: டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் - மீட்பு பணிகள் தீவிரம்!

    2020 ஆம் ஆண்டில், அமெரிக்க மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகள், அங்கீகரிக்கப்படாத மருந்து விற்பனை உலகளாவிய ஆண்டிபயாடிக் எதிர்ப்பை அதிகரிக்கக்கூடும் என்று கவலை தெரிவித்து இந்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். மருத்துவர்களின் பரிந்துரைகள் இன்றி உட்கொள்ளப்படும் மாத்திரைகளால் ஏற்படும் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு "தீவிர அச்சுறுத்தல்" என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
    Published by:Srilekha A
    First published:

    அடுத்த செய்தி