முகப்பு /செய்தி /இந்தியா / விவசாயிகள் வென்றனர், மோடி அரசு பயந்து விட்டது: லாலு பிரசாத் யாதவ்

விவசாயிகள் வென்றனர், மோடி அரசு பயந்து விட்டது: லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ்

பிரதமர் மோடி மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதன் மூலம் அவரின் ஆணவம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்றார் லாலு பிரசாத் யாதவ்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது அவரது அரசின் தோல்வி, விவசாயிகளின் வெற்றி என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதன் மூலம் அவரின் ஆணவம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்கிறார் லாலு பிரசாத் யாதவ். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் 25-வது ஆண்டு விழாவில் லாலு கூறிய போது, “நீண்ட நாட்களாக போராடி நன்மைக்காக உயிர்தியாகம் செய்த விவசாயிகளை நான் ஆராதிக்கிறேன். விவசாயிகள் வென்றனர், மத்திய அரசு தோல்வி தழுவியது. மத்திய அரசின் ஆணவம், திமிர் அடித்து நொறுக்கப்பட்டது.

குறைந்த பட்ச ஆதாரவிலை குறித்து தீர்மானமான அறிவிப்பு வராமல் போராட்டம் நிற்காது. விவசாயக் கூலிகளும் இந்த குறைந்த பட்ச ஆதாரவிலை மூலம் பயனடைவார்கள். மத்திய அரசு இதே போல் உள்ள பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

உலகின் நீண்ட கால அமைதிப் போராட்ட, ஜனநாயக வழி அறப்போராட்ட விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள். முதலாளித்துவ அரசும் அதன் அமைச்சர்களும் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே நம்பிக்கையின்மையை வளர்த்தனர். சத்தியாகிரக வழியில் போராடும் விவசாயிகளைப் பார்த்து பயங்கரவாதிகள், காலிஸ்தானியர்கள், தேச விரோதிக என்றெல்லாம் வர்ணித்தனர்.

நாடு எப்போதும் கட்டுப்பாடு, கண்ணியம், சகிப்புத்தன்மையில் நடக்கிறது. அதே வேளையில் நியாயமான அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயக முடிவுகளால்தான் நாட்டை நடத்த முடியும், மல்யுத்தம் செய்வதால் அல்ல.

நரேந்திர மோடியின் ஆணவம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட அங்கீகாரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.

மாநிலத்திலும், மத்தியிலும் என்டிஏ கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், விவசாயிகள் தரப்பில் ஆர்ஜேடி கட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விவசாயிகள், ஏழை மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் ஆட்சி அமைப்போம். பெண்களுக்கு அதிக அளவில் இடங்கள் ஒதுக்கப்படும்.

பிஹார் மக்களைப் பிரிந்து நீண்ட நாட்களாக இருந்ததாக நான் நினைக்கவில்லை. எப்போதும் மக்களுடன் இணைந்தே இருக்கிறேன். அதனால்தான் நானே இன்று ஜீப் ஓட்ட முடிவு செய்தேன், இவ்வாறு தெரிவித்தார் லாலு பிரசாத் யாதவ்.

First published:

Tags: Farm laws, Lalu prasad yadav, Modi