ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை முதலில் தடை செய்ய வேண்டும் : லாலு பிரசாத் யாதவ் ட்விட்டரில் பதிவு

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை முதலில் தடை செய்ய வேண்டும் : லாலு பிரசாத் யாதவ் ட்விட்டரில் பதிவு

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்ய லாலு பிரசாத் யாதவ் பதிவு

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்ய லாலு பிரசாத் யாதவ் பதிவு

ஆர்.எஸ்.எஸ் இதற்கு முன்னர் இரு முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இறும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் தான் முதலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்தார் என்பதை மறக்காதீர்கள்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Bihar, India

  முதலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்யுங்கள் என முன்னாள் பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

  இந்தியா அளவில் 11 மாநிலங்களில் கடந்த வாரம் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக அதன் அலுவகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக 8 மாநிலங்களில் நடந்த சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து. அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

  இந்நிலையில் பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இதை பற்றி கருத்தை பதிவிட்டுள்ளார்.

  இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “பி.எஃப்.ஐ போல வெறுப்பை பரப்பும் அனைத்து இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். முதலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்ய வேண்டும். பி.எஃப்.ஐயை விட அது மோசமான இயக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.

  Also Read : காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவில் இணைந்தார்

  மேலும், “ஆர்.எஸ்.எஸ் இதற்கு முன்னர் இரு முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இறும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் தான் முதலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்தார் என்பதை மறக்காதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Lalu prasad yadav, NIA, RSS