பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், தனது வீட்டில் படிக்கட்டில் தவறி விழுந்ததில் தோள்பட்டை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் தனது மனைவி ராப்ரி தேவியுடன் தங்கியுள்ளார்.
பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற அவர், உடல் நலக்குறைவால் ஜாமினில் வெளிவந்து சிகிச்சை பெற்று வீட்டிலேயே தங்கி வருகிறார். இந்நிலையில், பாட்னாவில் உள்ள தனது வீட்டின் மாடியில் இருந்து இறங்கும்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி படிக்கட்டில் தவறி விழுந்தார். இதில் காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் முதுகில் பலத்த காயமும், வலது தோள்பட்டையில் எலும்பு முறிவும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு உடல் நல தொந்தரவுகள் லாலு பிரசாத் யாதவுக்கு நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. குறிப்பாக சிறுநீரகக் கோளாறு காரணமாக தவித்து வரும் அவர் உயர் சிகிச்சைகாக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க:
பாஜக கூட்டத்தை உளவு பார்க்க சென்ற தெலங்கானா அதிகாரி சிக்கினார்
இந்த சூழலில் தான் இவர் தற்போது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இவருக்கு பிரத்தியேகமாக இரு மருத்துவர்கள் கவனித்து சிகிச்சை அளித்து வருவதாகவும், MRI பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளை வைத்து அடுத்தக்கட்ட சிகிச்சைகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் நிதீஷ் குமார் முதலமைச்சராக இருந்து ஆட்சி நடத்தி வரும் நிலையில், இவரது மகனான தேஜஸ்வி யாதவ் பீகார் மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.