லாலு பிரசாத் யாதவுக்கு என்ன பிரச்னை.? எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திடீர் மாற்றம்
லாலு பிரசாத் யாதவுக்கு என்ன பிரச்னை.? எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திடீர் மாற்றம்
லாலு பிரசாத் யாதவ்
Lalu Prasad Yadav: லாலு பிரசாத் யாதவுக்கு இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சனைகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு மேற் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்தததை அடுத்து ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைதண்டனை பெற்றதை தொடர்ந்து, ராஞ்சியில் உள்ள சிறையில் லாலு பிரசாத் அடைக்கப்பட்டார்.
உடல்நிலை பாதிப்பு காரணமாக, அங்குள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல ஜார்க்கண்ட் சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
லாலு பிரசாத் யாதவுக்கு இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சனைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ் நேற்று இரவு 9 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து சில மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.