முகப்பு /செய்தி /இந்தியா / உடல்நிலையில் பின்னடைவு- லாலு பிரசாத் யாதவ் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

உடல்நிலையில் பின்னடைவு- லாலு பிரசாத் யாதவ் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைதண்டனை பெற்றதை தொடர்ந்து, ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக, அங்குள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல ஜார்க்கண்ட் சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

லாலு பிரசாத் யாதவுக்கு இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சனைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுகிறது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு மீண்டும் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சில பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Lalu prasad yadav