மக்களவைத் தேர்தல் தோல்வி வருத்தம்! சிறையில் உணவு உண்ண மறுக்கும் லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ்

காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட தொகுதிகளில் கூட தோல்வியடைந்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மக்களவைத் தேர்தலில் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த வருத்தத்தில் அக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மதிய உணவு உண்ணாமல் இருந்துவருகிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிட்டன. மறுபுறம், பா.ஜ.கவும் ஜனதா தளம் கட்சியும் இணைந்து போட்டியிட்டன. அதில், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தன. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க 39 தொகுதிகளைக் கைப்பற்றியது.

  காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட தொகுதிகளில் கூட தோல்வியடைந்துள்ளது. கடந்த முறை மோடி அலை வீசிய போது கூட ஆர்.ஜே.டி நான்கு தொகுதிகளைக் கைப்பற்றியது. தேர்தலில் படுதோல்வியடைந்த வருத்தத்தில் இருக்கிறார் அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.

  மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறையிலிருக்கும் லாலு பிரசாத் யாதவ், கடந்த மூன்று தினங்களாக வழக்கம்போல உணவு உண்பதில்லை. காலையும் இரவும் உணவு எடுத்துக் கொள்கிறார். மதிய உணவு உட்கொள்வதில்லை என்று லாலுவின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: