ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாஜகாவை வீழ்த்த அதிரடி வியூகம் ? - சோனியாவை சந்தித்த நிதீஷ்குமார், லாலுபிரசாத் யாதவ்...!

பாஜகாவை வீழ்த்த அதிரடி வியூகம் ? - சோனியாவை சந்தித்த நிதீஷ்குமார், லாலுபிரசாத் யாதவ்...!

நிதீஷ் குமாருடன் லாலு யாதவ்

நிதீஷ் குமாருடன் லாலு யாதவ்

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் சந்தித்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பீகாரில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலையில், அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், கூட்டணி கட்சி கட்சி தலைவரான லாலு யாதவுடன் இணைந்து டெல்லி பயணம் மேற்கொண்டார். அங்கு அவர்கள் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

  2020 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து நிதீஷ் குமார் போட்டியிட்ட நிலையில், ராஷ்டிரிய ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி எதிரணியில் களம் இறங்கின. தேர்தல் முடிவுகளில், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் அதிக இடங்களையும், பாஜக அதை விட சில சீட்டுகள் குறைந்து இரண்டாம் இடத்தையும் பெற்றது. எண்ணிக்கை பலத்தில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 3ஆவது இடத்தில் இருந்தாலும், கூட்டணி கட்சியான பாஜக நிதீஷ் குமாரை மீண்டும் முதலமைச்சர் பதவியேற்க கூறி ஆதரவு கொடுத்தது.

  இந்நிலையில், சுமார் 2.5 வருட ஆட்சிக்குப் பின் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி எதிரணியான ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணி அரசை அமைத்தார். இது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணித்திரட்டும் செயலில் நிதீஷ் குமார் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து 2024 தேர்தல் வியூகம் குறித்து பேசி வருகிறார். இந்நிலையில், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியை அவரது டெல்லி ஜன்பத் இல்லதில் நிதீஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் சந்தித்தார்.

  சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், "சோனியா காந்தியுடன் நாங்கள் இருவரும் நன்கு உரையாடினோம். நாட்டின் வளர்ச்சிக்காக நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால் அதன் பின்னர் சோனியா காந்தி சந்திப்பு குறித்து பேசுவார்" எனக் கூறினார்.

  இதையும் படிங்க: டாலர் பிரச்சனையை உலகிலேயே இந்தியா தான் சிறப்பாக கையாள்கிறது..ரூபாய் வீழ்ச்சி குறித்து நிதியமைச்சர் பதில்

  பின்னர் லாலு யாதவ் பேசுகையில், "எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும். பீகார் போல அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக கட்சிகள் அணி திரள வேண்டும். பாஜகவை பார்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றும் பயப்படவில்லை" என்றார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் சோனியா காந்தியை இருவரும் மீண்டும் சந்திப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Bihar, Lalu prasad yadav, Nitish Kumar, Sonia Gandhi