• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லஷ்மி விலாஸ் வங்கி, சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பு..

லஷ்மி விலாஸ் வங்கி, சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பு..

லக்ஷிமி விலாஸ் வங்கி

லக்ஷிமி விலாஸ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

  • Share this:
    1926-ஆம் ஆண்டு கரூரில் தொடங்கப்பட்ட லஷ்மி விலாஸ் வங்கி தமிழகம் உட்பட 16 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் 563 கிளைகளுடன் பல பகுதிகளில் கடந்த 94 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடு, கடந்த சில ஆண்டுகளாக வாராக்கடன் அதிகரிப்பு, இயக்குநர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, வரும் டிசம்பர் 16-ம் தேதி வரை அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 25,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது.

    இந்த நிலையில் டிபிஎஸ் வங்கியுடன் லஷ்மி விலாஸ் வங்கியை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2500 கோடி ரூபாயை டிபிஎஸ் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கியில் செலுத்த உள்ளது.

    மேலும் படிக்க.. Cyclone Nivar | தமிழகத்தில் 69 ரயில்கள் இன்று ரத்து.. சென்னையில் விமானம் மற்றும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்..





    இதற்கு பதிலாக லஷ்மி விலாஸின் 563 கிளைகள், 974 ஏடிஎம்கள் மற்றும் சில்லறைக்கடன்களில் 1.6 பில்லியன் டாலரின் உரிமையை டிபிஎஸ் வங்கி எடுத்துக்கொள்ளும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: