முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. தரிசனத்துக்காக 35 மணி பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. தரிசனத்துக்காக 35 மணி பக்தர்கள் காத்திருப்பு

திருமலை திருப்பதியில் குவிந்துள்ள பக்தர்கள்

திருமலை திருப்பதியில் குவிந்துள்ள பக்தர்கள்

திருப்பதியிில் நாளை புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை என்பதால் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நிற்கும் அளவிற்கு பக்தர்கள் குவிந்துள்ளனர்.

  • Last Updated :
  • Tirumala, India

பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோத்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று கடந்த 5ஆம் தேதி நிறைவடைந்தது. பொதுவாகவே, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்கதர்கள் அதிகமாக வருகை தரும் நிலையில் புரட்டாசி மாதத்திற்கு கூடுதல் சிறப்பு என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகம் காணப்படும். நாளை புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இதனால் இலவச தரிசனத்திற்கு 35 மணி நேரமும், 300 ரூபாய் கட்டண தரிசத்திற்கு நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று கொண்டுள்ளனர். நாளை புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு குடிநீர் டீ, காபி ஆகிய உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் பல்துறை கலாச்சார மையத்தை திறந்து வைக்கிறார் ஈஷா அம்பானி!

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்க உள்ளாகி வருகின்றனர். மேலும், பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளதால் விஐபி தரிசனம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 72,192 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.17 கோடி காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

top videos

    செய்தியாளர்: புஷ்பராஜ் (திருப்பதி)

    First published:

    Tags: Tirumala, Tirumala Tirupati