ஹோம் /நியூஸ் /இந்தியா /

அரசு வேலைக்கு போட்டித்தேர்வு.. ரயிலில் இடம்பிடிக்க தள்ளுமுள்ளு - களேபரமான உ.பி ரயில் நிலையங்கள்

அரசு வேலைக்கு போட்டித்தேர்வு.. ரயிலில் இடம்பிடிக்க தள்ளுமுள்ளு - களேபரமான உ.பி ரயில் நிலையங்கள்

உத்தரப் பிரதேச ரயில்நிலையங்களில் குவிந்த இளைஞர்கள்

உத்தரப் பிரதேச ரயில்நிலையங்களில் குவிந்த இளைஞர்கள்

UP-PET - எனப்படும் முதல் நிலை தகுதித்தேர்வில் பங்கேற்க சுமார் 35 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததால் முதல் நாளே தேர்வுக்கு செல்ல ரயில் நிலையங்களில் இளைஞர்கள் குவியத் தொடங்கினர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கடந்த இரு நாள்களாக பொது போக்குவரத்து வழக்கத்துக்கு மாறான கூட்ட நெரிசலை கண்டது. அம்மாநிலத்தில் நீண்ட நாள்களுக்குப் பின் அரசு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது. இந்த தேர்வை எழுதவே லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வு மையங்கள் முக்கிய நகரங்களில் வைக்கப்பட்டிருந்தன.

  UP-PET - எனப்படும் முதல் நிலை தகுதித்தேர்வில் பங்கேற்க சுமார் 35 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததால் முதல் நாளே தேர்வுக்கு செல்ல ரயில் நிலையங்களில் இளைஞர்கள் குவியத் தொடங்கினர். கான்பூர், கோரக்பூர், ஜான்சி, ஹாபூர், சார்பாக், பிராயாக்ராஜ் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

  ஒரு கட்டத்தில் ரயில்நிலையங்களில் நிற்கக்கூட இடமில்லாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. அத்துடன் முக்கிய ரயில்களான கங்கா-கோமதி எக்ஸ்பிரஸ், லக்னோ - பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ்  ரயில் ஆகியவற்றில் கழிவறைகளில் கூட நிற்க இடமில்லாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.

  25 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு சுமார் தேர்வு 1,900 மையங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் முக்கிய நகரங்களிலேயே இருந்த நிலையில், தேர்வுக்கு தேவையான போக்குவரத்து முன்னேற்பாடுகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மேற்கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதேவேளை, எதிர்க்கட்சிகள் போலி வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவதாக உபி அரசும் அமைச்சர்களும் பதில் தந்துள்ளனர்.

  இதையும் படிங்க: நாட்டில் வரவேற்கத்தக்க மாற்றம்.. இந்தியில் எம்பிபிஎஸ் திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு

  நாட்டில் பொதுவாகவே அரசு வேலைக்கான மவுசு அதிகம் காணப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான வேலைகளுக்கு இப்படி லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்து போவது நாட்டின் வேலையிண்மை பிரச்னையை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

  காங்கிரஸ் எம்பி ப .சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், "உத்தரப் பிரதேசத்தில் வெறும் ஆயிரம் கிரேட் - சி வேலைக்காக சுமார் 37 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வில் வெற்றி முடியாமல் சுமார் 36 லட்சம் இளைஞர்கள் இருக்கப்போகும் நிலையில், அவர்களின் நிலையை பாஜகவும் யோகி ஆதித்யநாத்தும் ஒத்துக்கொள்வார்களா. இரட்டை என்ஜின் அரசு என்ன செய்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Government, Government jobs, Indian Railways, Railway Station, Uttar pradesh