• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லக்கீம்பூர் துயரம்: உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு சிக்கல்?- முக்கிய ஆலோசனைக் கூட்டம்

லக்கீம்பூர் துயரம்: உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு சிக்கல்?- முக்கிய ஆலோசனைக் கூட்டம்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பாஜக உயர் மட்ட கூட்டத்தை டெல்லியில் கூட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    பாஜக உயர்மட்ட அவசரக் கூட்டத்தில் பிரதான விவாதப்பொருளே லக்கிம்பூர் கேரியில் 4 விவசாயிகள் கார் மோதி மரணமடைந்த சம்பவத்தில் பாஜக மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா சம்பந்தப்பட்டிருப்பதால் பாஜகவுக்கான தேர்தல் வெற்றி பாதிக்கப்படுமா என்பதே. ஏனெனில் இந்த கார் கூட்டத்துக்குள் புகுந்து 4 விவசாயிகள் இறந்ததையடுத்து நாடு முழுதும் கடும் விமர்சனங்களும் எதிர்ப்புக் குரல்களூம் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் தானோ, தன் மகனோ சம்பவ இடத்தில் இல்லை என்று அஜய் மிஷ்ரா கூறியதையடுத்து இப்போதைக்கு அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என்று பாஜக உள் வட்டாரங்கள் முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளன. ஆனால் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்வது பற்றியும் பாஜக உயர்மட்ட குழு விவாதத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது. இந்த உயர்மட்ட கூட்டத்தில் உ.பி. பாஜக தலைவர் ராதா மோகன் சிங், தேர்தல் தலைமை தர்மேந்திர பிரதான், ஜே.பி.நட்டா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    விவசாயிகளின் மரணங்களும், ஆஷிஷ் மிஷ்ரா கைது விவகாரத்தில் உ.பி. போலீஸின் செயல்பாடுகளும் விவசாயிகள் அமைப்பில் கோபத்தைக் கிளறியுள்ளதாகத் தெரிகிறது. ஒரு புறம் விவசாயிகள் அன்னியமாகிக் கொண்டே போகின்றனர், இன்னொரு புறம் பிராமண சமுதாயத்தினரின் வாக்குவங்கி. இருதரப்பினருமே பாஜக மீது அதிருப்தி கொண்டுள்ளதாக உ.பி. அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    மிஷ்ரா பிராமண வகுப்பைச் சேர்தவர். சிறிய அளவில் இருந்தாலும் உ.பி. தேர்தலின் சாதி அரசியலினால் இவர்கள் வாக்கும் முக்கியமாகிறது. ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை உ.பி. முதல்வராக்கியதில் பிராமண சமுதாயத்தினர் அதிருப்தி கொண்டுள்ளதாக உ.பி. தேர்தல் அலசல்வாதிகள் கருதுகின்றனர். உ.பி. பாஜக பிராமணர்களை ஒடுக்குகிறது என்ற குரல்களும் அங்கு ஒலிப்பதாலும், விவசாயிகள் பலியான இந்த லக்கீம்பூர் கேரி சம்பவத்தாலும் பாஜக உ.பி. தேர்தல் வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்ற நிலை இருப்பதால் பாஜக உயர்மட்ட கூட்டத்தை கூட்டி 4 மணி நேரம் விவாதித்துள்ளது.

    Also Read: லக்கிம்பூர் வன்முறையில் பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனையில் பங்கேற்கும் பிரியங்கா காந்தி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: