• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ’நாளைக்குள் பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால்..’ நவ்ஜோத் சித்து எச்சரிக்கை!

’நாளைக்குள் பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால்..’ நவ்ஜோத் சித்து எச்சரிக்கை!

’நாளைக்குள் பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால்..’ நவ்ஜோத் சித்து எச்சரிக்கை!

’நாளைக்குள் பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால்..’ நவ்ஜோத் சித்து எச்சரிக்கை!

உ.பியில் விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணமான அமைச்சரின் மகனை கைதுசெய்யாவிட்டால், லக்கிம்பூர் நோக்கி காங்கிரஸார் படையெடுப்போம் என நவ்ஜோத் சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • Share this:
    உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் பாதுகாப்புக்கு வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில் கார் மோதி நான்கு விவசாயிகள் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, நடந்த வன்முறையில் 2 பாஜக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 8 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பதற்றத்தை குறைக்க லக்கிம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த விவசாயிகள் குகுடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்குவதாக அம்மாநில அரசு உறுதி அளித்துள்ளது.

    இதனிடையே, உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரில் உள்ள கேரி பகுதிக்குச் செல்ல முயன்ற பிரியங்கா காந்தியை போலீஸார் சீதாபூரில் தடுத்து நிறுத்தினர். அவரை அங்குள்ள விடுதி ஒன்றில் சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

    தொடர்ந்து, சிதாபூரில் தடுப்பு காவலில் உள்ள பிரியங்கா காந்தியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    இதைத்தொடர்ந்து, தடுப்பு காவலில் உள்ள பிரியங்கா காந்தியை விடுதலை செய்யாவிட்டால், லக்கிம்பூர் நோக்கி காங்கிரஸார் பேரணி செல்வோம் என முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.



    இதுதொடர்பாக நவ்ஜோத் சித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, நாளைக்குள் விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணமாக மத்திய அமைச்சரின் மகன் கைது செய்யப்படவில்லை என்றாலோ, சட்டத்துக்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தி விடுதலை செய்யப்படவில்லை என்றாலோ, பஞ்சாப் காங்கிரஸார் லக்கிம்பூர் நோக்கி படையெடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: