• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லக்கிம்பூர் வழக்கு: வெறும் 23 சாட்சிகள்தானா? உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

லக்கிம்பூர் வழக்கு: வெறும் 23 சாட்சிகள்தானா? உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

லக்கிம்பூர் கெரி வழக்கு

லக்கிம்பூர் கெரி வழக்கு

லக்கிம்பூர் வழக்கின் வீடியோ ஆதாரங்களை தடயவியல் ஆய்வகங்கள் விரைவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கில் 23 பேர்தான் நேரில் கண்ட சாட்சிகள் என்பது தொடர்பாக உத்தரப் பிரதேச அரசுக்கும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  • Share this:
    லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை கொண்டு மோதப்பட்ட சம்பவத்தின்போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் அங்கு இருந்தப்போதும், இந்த  வழக்கில் 23 சாட்சிகளின் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  சாட்சிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. காரை மோதச் செய்ததாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில்,  அக்டோபர் 11ம் தேதி ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யபட்டார்.

    இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோலி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  வழக்கின் நிலை குறித்த 2வது அறிக்கையை உத்தரப் பிரதேச அரசு தாக்கல் செய்தது. உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, 68 சாட்சிகளில் 30 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 23 பேர் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: Covid Variant AY.4.2: வேகமாக பரவும்... இறப்பு ஆபத்து குறைவு: புதியவகை கொரோனா குறித்து ஐசிஎம்ஆர் தகவல்

    அப்போது, நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணியில் பங்கேற்றிருந்தபோது வெறும் 23 பேர்தான் நேரில் கண்ட சாட்சிகளா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த சம்பவத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் இருந்துள்ளனர் . அவர்கள் அனைவரும் உள்ளூர் மக்கள், சம்பவத்திற்கு பின்னர் நீதி வேண்டும் என்று அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்களை அடையாளம் காண்பது கடினமல்ல.

    விசாரணை குழு மேலும் அதிகமான நேரடி சாட்சிகளை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தது. வழக்கின் வீடியோ ஆதாரங்களை தடயவியல் ஆய்வகங்கள் விரைவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு வாய்மொழியாக கூறியது. சாட்சிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    மேலும் படிக்க: ஆண்- பெண் இடையேயான திருமணத்துக்கு மட்டுமே அங்கீகாரம்: மத்திய அரசு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: