இந்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ராகிங் சம்பவங்களை ஆவணப்படுத்தவும் குற்றவாளிகளை அடையாளம் காணவும் மத்தியப் பிரதேச காவல்துறையில் 24 வயது பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஏகன் பட பாணியில் கல்லூரி மாணவியாக ரகசிய பணி நடத்தியுள்ளார்.
மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவ கல்லூரியில் புதிதாக வரும் மாணவர்களை ராகிங் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. இதை வெளியே சொன்னால் மேலும் துன்புறுத்துவார்கள் என்ற பயத்தில் பெரும்பாலான மாணவர்கள் அப்படியே விட்டுவிட்டனர்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஹெல்ப்லைனில் ஒரு மாணவி புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், ஜூலை 24 அன்று அடையாளம் தெரியாத மாணவர்கள் மீது கல்வி நிறுவன நிர்வாகம் சார்பில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: வெப் சீரிஸில் வந்த மும்பை தாக்குதல்.. பாகிஸ்தானின் ஓடிடி தளத்தை தடை செய்த இந்தியா!
சன்யோகிதகஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் தெஹ்சீப் காசி கூற்றுப்படி , யுஜிசி ஹெல்ப்லைனில் உள்ள புகாரில் ராகிங் சம்பவம் குறித்த முழு விவரங்கள் உள்ளன என்று கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் புகார் அளித்த மாணவியின் பெயர்கள் மட்டுமே இல்லை என்று கூறினார்.
ராகிங் சம்பவங்கள் குறித்த புகாரில், சமூக ஊடக தள அரட்டைகளின் ஸ்கிரீன் ஷாட்களைக் கொண்டிருந்தது. முதலாம் ஆண்டு மாணவர்கள் தலையணையுடன் உடலுறவு கொள்வது போன்ற ஆபாசமான செயல்களைச் செய்ய வைக்கப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன.
ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. மேலும் அதை அனுப்பியவர்களின் எண் மற்றும் விபரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீஸ் உடையில் விசாரிக்க சென்றதால் புகார் கொடுத்தவரோ பாதிக்கப்பட்டவரோ பேச முன்வர வில்லை.எங்கே பேசினால் இவர்களது கொடுமை அதிகரிக்குமோ என்ற பயத்தில் இருந்துருக்கலாம் என்று போலீஸ் துறையினர் யூகித்தனர்.
இதனால் அதே கல்லூரியில் மாணவர்களின் செயல்பாடுகளை கவனிக்கவும் ராகிங் செய்யும் நபர்களை அடையாளம் காணவும் ஷாலினி சௌஹான் என்ற இளம் காவலரை மருத்துவ கல்லூரி மாணவியை போல் கல்லூரிக்கு அனுப்பியுள்ளனர். அவரும் மற்ற மாணவர்களோடு சகஜமாக பழகி கல்லூரி நடவடிக்கைகளை 3 மாதங்கள் ரகசியமாக கவனித்து வந்துள்ளார்.
ராகிங் சம்பவங்கள் கேன்டீனில் அதிகம் நடக்கும் என்பதால் கேன்டீனில் சுற்றித் திரியும் மாணவர்களுடன் நட்பு கொண்டிருந்தார். ஒரு நாளில் சுமார் 6 மணி நேரம் அங்கே இருந்து வழக்கை வழிநடத்தும் அதிகாரிகளான இன்சார்ஜ் தெஹ்ஜிப் காசி மற்றும் எஸ்ஐ சத்யஜீத் சௌஹான் ஆகியோரின் உள்ளீடுகளில் குறியிடப்பட்ட மாணவர்களை அவர் கண்காணித்து வந்தார்.
இறுதியில், முதலாம் ஆண்டு மாணவர்களை கொடூரமாக ராகிங் செய்ததாகக் கூறப்படும் 11 மூத்த மாணவர்களை அவர் அடையாளம் கண்டார். அவர்கள் கல்லூரி மற்றும் விடுதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கூடுதலாக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படும் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:மூதாட்டியின் கம்மலை பறித்து செல்ல முயற்சி... திருடர்களை நடுரோட்டில் விளாசிய சிங்கப்பெண்..!
ஷாலினியைத் தவிர, செவிலியராகவும் கேன்டீன் பணியாளர்களாகவும் மூன்று கூடுதல் போலீஸ் இந்த வழக்கு குறித்து விசாரணைக்கு உதவியாக இருந்தனர். 3 மாத காலம் இவர்கள் குற்றவாளிகளை கண்டறியும் வரை இவர்கள் போலீஸ் என்று யாரும் கண்டுபிடிக்க வில்லை.
ஷாலினி சௌஹான்
இந்தூரில் உள்ள சன்யோகிதகஞ்ச் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட ஷாலினி சவுகான் தந்தை, ஒரு போலீஸ்காரர், 2010 இல் இறந்தார். அவரது தாயார் தந்தை இறந்த ஒரு வருடம் கழித்து இறந்தார்.
தந்தையின் பணியால் ஈர்க்கப்பட்டு, ஷாலினி படையில் சேர்ந்தார்.பணியில் சேர்ந்த ஷாலினியின் முதல் மிஷனே, மிஷன் MGM ஆகும். ஐந்து மாதங்களுக்கும் மேலாக புலனாய்வாளர்களை தோற்கடித்த ஒரு வழக்கை முடிக்க சவுகான் போதுமான தகவல்களை சேகரித்தார் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இவரது பணியை, நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மக்களும் பாராட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madhya pradesh, Police, Students