அமைப்புசாரா தொழிலாளர்கள் இனி அரசின் சலுகைகளை பெற இது தான் ஒரே வழி!

அமைப்புசாரா தொழிலாளர்

380 மில்லியன் முறைசாரா தொழிலாளர்களுக்கு 12 இலக்க தனித்துவமான எண்ணை மத்திய அரசு வழங்க உள்ளது

  • Share this:
நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான குறிப்பிடத்தக்க முயற்சியாக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இ-ஷிராம் (e-SHRAM) என்ற ஆன்லைன் போர்ட்டலைத் தொடங்குகிறது. இதன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் நன்மைகளை அரசு வழங்கும்.

நாடு முழுவதும் உள்ள 38 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த தரவை உருவாக்குவதுடன், இதில் இணையும் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க தனித்துவமான UAN எண் மற்றும் சுயவிவரங்கள் அடங்கிய அடையாள கார்டு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அளிக்கப்படும். இந்த நடவடிக்கை, நலத்திட்டங்களின் பெயர்வுத்திறன் மற்றும் நெருக்கடி காலங்களில் பண மற்றும் பணமில்லா நன்மைகளை அவர்களுக்கு கிடைக்கச் செய்யும்.

Also Read:  என்னது ரூ.5 கோடிக்கு வாட்சா.. திகைக்க வைத்த ஹர்திக் பாண்டியா…!

தொழிற்சங்கங்கள் தரவுத்தளத்தை விரிவுபடுத்துவதிலும் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் பங்கு வகிக்கும்,

இனி வரும் காலங்களில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் மூலம் கிடைக்கும் நன்மைகள் முழுதும் சென்று சேர முக்கிய கருவியாக e-SHRAM விளங்கும்.

Also Read:   தமிழகத்தில் உதயமாகும் 29 புதிய நகராட்சிகளின் பட்டியல்…

ஒவ்வொருஅமைப்புசாரா பணியாளரும், கடைசி வரிசையில் நிற்கும் ஒருவர் கூட, பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களுடன் இ-ஷிராம் போர்ட்டல் மூலம் இணைக்கப்படுவார் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபிந்தர் யாதவ் இ-ஷிராம் போர்டலின் லோகோவை இன்று மாலை வெளியிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் திட்டமிடப்பட்டபடி, இந்த போர்டல் நமது தேசத்தை உருவாக்குபவர்களின் தேசிய தரவுத்தளமாக இருக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்த போர்டல் நலத்திட்டங்களை அவர்களின் வீட்டு வாசலில் கொண்டு செல்ல உதவும்..” என பதிவிட்டுள்ளளார்.

 
Published by:Arun
First published: