Home /News /national /

மும்பையில் சிக்கிய ரூ.1725 கோடி மதிப்பிலான ஹெராயின்.. சர்வதேச கடத்தல் மையமாகிறதா இந்தியா?

மும்பையில் சிக்கிய ரூ.1725 கோடி மதிப்பிலான ஹெராயின்.. சர்வதேச கடத்தல் மையமாகிறதா இந்தியா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்தியாவில் 2019- ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் பறிமுதல் அதிகரித்து வருகிறது, குறிப்பாக குஜராத் கடற்கரைப் பகுதியே கடத்தல்காரர்களின் விருப்பமான பாதையாக மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    மும்பையில் 1,725 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது, வடமேற்கு கடற்கரையிலிருந்து போதைப்பொருள் கடத்தல் அதிகரித்திருப்பது, இந்தியா கடத்தல் கேந்திரமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    மும்பையின் நவா ஷேவா துறைமுகத்தில் 1,725 கோடி ரூபாய் மதிப்பிலான 22,000 கிலோ ஹெராயின் கண்டெய்னருடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின், அதிமதுரத்தால் பூசப்பட்டு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெராயின் வைக்கப்பட்டிருந்த கண்டெயினர் தற்போது டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹெராயின் மீது பூசப்பட்டுள்ள அதிமதுரத்தின் எடை மட்டுமே 345 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச கடத்தல்காரர்கள், பல்வேறு முறைகளை கையாண்டு, இந்தியாவை கடத்தல் மையமாக பயன்படுத்துவதாக சிறப்பு ஆணையர் HGS தாலிவால் தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் பயங்கரவாதம் நம் நாட்டை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் சர்வதேச வீரர்கள் போதைப்பொருளை நம் நாட்டிற்குள் தள்ள வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த கைப்பற்றல் சுட்டிக்காட்டுகிறது என்றார்.

    இந்தியாவில் 2019- ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் பறிமுதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குஜராத் கடற்கரைப் பகுதியே கடத்தல்காரர்களின் விருப்பமான பாதையாக மாறியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை குஜராத், டெல்லி மற்றும் கொல்கத்தாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில், 6,800 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,300 கிலோ ஹெராயிளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    ஜூலை 12 அன்று, பஞ்சாப் காவல்துறை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீசார், கட்ச் முந்த்ரா துறைமுகத்தில் ஏறக்குறைய 75 கிலோ 'உயர்தர' ஹெராயிளை கைப்பற்றினர். செப்டம்பர் 2021-ல் முந்த்ரா துறைமுகத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய அளவாக 21,000 கோடி மதிப்பிலான 2, 988 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கண்ட்லா துறைமுகத்தில் 260 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கட்ச் வளைகுடாவை ஒட்டிய இந்தியாவின் வடமேற்கு கடற்கரை போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு விருப்பமான பாதையாக மாறியுள்ளது.

    1,000-கிலோ மீட்டர் நீளமான கடற்கரையை உள்ளடக்கிய கட்ச் வளைகுடா ஆழமற்ற நீர்நிலையாகும், இங்கு தீவுககள், சேற்றுப் பாறைகள், பவளத் தீவுகள் மற்றும் கடலோர சதுப்புநிலக் காடுகள் போதைப்பொருள் கடத்தலுக்கு தடையில்லா பாதையாக விளங்குகின்றன.

    Read More: போதைக்காகவே உருவாக்கப்பட்டதா ஹெராயின்..? போதை மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களிலேயே விலை உயர்ந்தது

    இதுமட்டுமல்லாமல் குஜராத் முழுவதும் ஹெராயின் பதப்படுத்தும் உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் மும்பை போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில், குஜராத்தின் அங்கலேஷ்வரில் உள்ள ஒரு உற்பத்தி பிரிவில் இருந்து 1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ மெபெட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருளுடன் கைதுசெய்யப்படுபவர்கள் பெரும்பாலனவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், நாட்டின் பாதுகாப்பும் கேள்வி குறியாகி வருகிறது.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Mumbai, Punjab

    அடுத்த செய்தி