• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Exclusive: மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிய ‘குட்டி கோவா’... புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Exclusive: மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிய ‘குட்டி கோவா’... புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

புதுச்சேரி

புதுச்சேரி

"குட்டி கோவா" போல் புதுச்சேரி இருப்பதாக கூறும் சுற்றுலா பயணிகள் குறைந்த செலவில் இரண்டு நாட்கள் மகிழ்ச்சியான சுற்றுலா தளமாக புதுச்சேரி இருப்பதாக தெரிவித்தனர்.

  • Share this:
கொரோனா இரண்டாவது அலை காரணமாக புதுச்சேரி, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரிக்கு  வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத் துவங்கியுள்ளனர். தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வரத் துவங்கியுள்ளனர். புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தலமான கடற்கரை சாலையில், பொதுமக்கள் செல்வதற்கு இருந்த தடை 70 நாட்களுக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கடற்கரை சாலையில் கூடி மகிழ்ந்தனர். கொரோனா ஊரடங்கில் வீடுகளுக்குள் முடங்கி இருந்த மக்கள் சுற்றுலாவாக புதுச்சேரிக்கு வந்து கடற்கரை சாலையில் கூடி மகிழ்கின்றனர்.  அனைவரும் முக கவசம் அணிந்து கடற்கரை சாலையில் செல்பி எடுத்தும் புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.

Also Read:  மணமேடையில் இருக்க வேண்டிய மகனை பிணவறையில் படுக்க வைத்த தந்தை.!

கடந்த 2019-ம் ஆண்டில் புதுச்சேரிக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2019-ல் 26 சதவீதம் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.  எனவே ஆண்டு முழுவதும் "அறைகள் இல்லை" என அறிவிப்பே காணப்பட்டது.  ஆனால் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் காரணமாக புதுச்சேரியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது.

Also Read:   விண்வெளிக்கு செல்லும் இங்கிலாந்தின் பெரும் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனுக்கும் கடலூருக்கும் என்ன தொடர்பு?

ஓராண்டு காலமாக புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளே வரவில்லை. சுற்றுலாவை நம்பியுள்ள புதுச்சேரியில் சிறிய டீக்கடை முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மேலும் 7 மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக கடற்கரை சாலை, பூங்காக்கள், மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது.

புதுச்சேரி


"குட்டி கோவா" போல் புதுச்சேரி இருப்பதாக கூறும் சுற்றுலா பயணிகள் குறைந்த செலவில் இரண்டு நாட்கள் மகிழ்ச்சியான சுற்றுலா தளமாக புதுச்சேரி இருப்பதாகவும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சுற்றுலாவிற்கு உகந்த இடம் புதுச்சேரி என மகிழ்வுடன் தெரிவிக்கின்றனர்.  மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா, அருங்காட்சியகம், படகு துறை போன்ற இடங்களை ஆர்வத்துடன் மக்கள் கண்டு களித்தாலும் மிக பெரிய பொழுது போக்குதளமாக கடற்கரை சாலை இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடற்கரை சாலையானது 1.2 கிலோமீட்டர் நீண்டதாக உள்ளது. இது போர் நினைவகத்தில் (War Memorial) தொடங்கி டூப்ளே பூங்கா (Dupliex Park) வரை உள்ள குபேர் (Goubert) வீதியில் முடிவடைகிறது. இங்கு ஃபிரெஞ்சு தூதரகம் அமைந்துள்ளது. இங்கு லா காபே என்ற ஓரு உணவகம் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. கடற்கரை ஓரத்தில் அதிக ஃபிரெஞ்சு பாரம்பரிய கட்டிடங்களை காணலாம். இவை அனைத்தும் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: