கேரளா மாநிலம் திருச்சூரில் குதிரன் மலையை குடைந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள தென்னிந்தியாவின் நீளமான குகைப்பாலமான ‘குதிரன் சுரங்கப்பாதை’ மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததுள்ள நிலையில் ஆர்வத்துடன் வாகன ஓட்டிகள் அந்த சுரங்க பாதையில் பயணித்து வருகின்றனர்.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பாலக்காடு - திருச்சூர் சாலையில் குதிரன் என்ற இடத்தில் மலைகளை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. மன்னுத்தி - வடக்கன்சேரி பகுதிகளை இணைக்கும் இப்பகுதி, மலைப் பாங்கான பகுதியாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட்டன.

Kuthiran Tunnel
கனரக சரக்கு வாகனங்கள் மெதுவான வேகத்தில் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. சாலையின் இடையே குறுக்கிடும் மலையை கடக்க 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்த்து. இவற்றை தவிர்க்கும் வகையில் மலையை குடைந்து தேசிய நெடுஞ்சாலை சார்பில் சுரங்கப் பாதை அமைக்க 2016ல் திட்டமிடப்பட்டது.
Also Read:
Kuthiran Tunnel | குதிரன் சுரங்கப்பாதை திறப்பு: கோவையிலிருந்து கேரளா செல்வோர் ஹேப்பி!
பீச்சி வாசஹனி வன விலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பணிகள் செய்யப்பட்டு வந்தது. பாலக்காடு - திருச்சூர் சாலை மற்றும் திருச்சூர் - பாலக்காடு சாலை ஆகிய இரண்டு பாதைகளில் இரண்டு சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இரண்டிலும் சேர்த்து 6 வழிச் சாலையாக 1.6 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. இதனால் இரண்டு நிமிடங்களில் அந்த மலையை கடந்து செல்ல முடியும்.

Kuthiran Tunnel
1300 கோடி ரூபாய் செலவில் இந்த சுரங்கப் பாதை பணிகள் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பாலக்காடு - திருச்சூர் சாலையில் உள்ள சுரங்கப் பாதை பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு வழி பாதை திறக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
964 மீட்டர் தூரம் மலைக்குள் சுரங்கப் பாதை செல்கிறது. 14 மீட்டர் அகலமும், 10 மீட்டர் உயரமும் கொண்டதாக சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 1200 எல்.இ.டி. விளக்குகள் மற்றும் 100 மீட்டருக்கு ஒன்று என்ற வீதத்தில் சிசிடிவி கேமராக்கள், இரண்டு எமர்ஜென்சி போன்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

Kuthiran Tunnel
குதிரன் சுரங்கப் பாதையை முழுமையாக கண்காணிப்பதற்கு பிரத்யேகமான கண்ட்ரோல் ரூம் இயங்கிவருகிறது. அங்கு சுரங்கபாதை வழியாக நுழையும் அனைத்து வாகனங்களும் மக்களும் கண்காணிக்க படுவதாகவும், அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் உடனடியாக அதற்கான பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த ஞாயிற்று கிழமை அன்று மாலை முதல் பாலக்காடு - திருச்சூர் சாலையில் உள்ள சுரங்கப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. திருச்சூர் - பாலக்காடு சாலையில் சுரங்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு அப்பாதையும் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுரங்க பாதை பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.