முகப்பு /செய்தி /இந்தியா / தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்... குவியும் வாழ்த்து..!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்... குவியும் வாழ்த்து..!

குஷ்பு

குஷ்பு

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்புவுக்கு அண்ணாமலை ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பாக நடிகை குஷ்புவிற்கு வாழ்த்து தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில்,"பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் உரிமைக்காக அவரின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இது." இவ்வாறு  என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்து பதில் ட்வீட் செய்துள்ள குஷ்பு, தங்களின் ஆதரவும், மதிப்பும் எனக்கு என்றும் ஊக்கமாக இருந்து வருகிறது என்று கூறியுள்ளார். இதேபோல பாஜக உள்பட பல்வேறு தரப்பினரும் குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Annamalai, Kushboo, Kushbu