Kerala election results 2021 | பெட்ரோல் விலையை ரூ.60 ஆகக் குறைப்போம் என்று சொன்ன பாஜகவின் கும்மணம் ராஜசேகரன் முன்னிலை

பாஜக கும்மணம் ராஜசேகரன்

கேரளாவில் திருவனந்தபுரத்தின் 14 சட்டமன்ற தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணி 12 இடங்களில் முன்னிலை வகித்து தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

  • Share this:
    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆகக் குறைப்போம் என்ற கேரளா பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் கேரளாவின் குஜராத் என்று அழைக்கப்படும் நீமம் தொகுதியில் 510 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

    சிபிஎம் கட்சியின் சிவக்குட்டி, காங்கிரஸ் கட்சியின் வி.முரளிதரன் போன்ற ஜாம்பவான்களை எதிர்த்து இவர் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடக்க நிலை முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைய நிலவரப்படி கேரளாவில் மொத்தம் 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான முன்னிலை நிலரவரப்படி இடது ஜனநாயக முன்னணி 85 தொகுதிகளிலும் காங்கிரஸ் 51 தொகுதிகளிலும் பாஜாக் 3 தொகுதிகளிலும் மற்றவை 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

    கும்மணம் ராஜசேகரன் மார்ச் 4ம் தேதி வாக்கில் கேரளாவின் பாஜக நிலவரம் பற்றி பேசும்போது, “பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர கேரள அரசு கோரிக்கை வைக்காதது ஏன்?  நாங்கள் கணக்கிட்டுப் பார்த்தால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலை கொண்டு வந்தால், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.60 தான் வரும்  மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் திருவனந்தபுரத்தின் 14 சட்டமன்ற தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணி 12 இடங்களில் முன்னிலை வகித்து தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. ஐக்கிய ஜனநாயக முன்னணி 1 இடத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

    முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தன் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

    திருச்சூரில் 13 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆளும் இடது ஜனநாயக முன்னணியே முன்னிலை வகிக்கிறது.
    Published by:Muthukumar
    First published: