Home /News /national /

Kumbalangi: நாட்டிலேயே முதல் சானிட்டரி நாப்கின் இல்லாத கிராமம் இது தான்!

Kumbalangi: நாட்டிலேயே முதல் சானிட்டரி நாப்கின் இல்லாத கிராமம் இது தான்!

Menstrual cups

Menstrual cups

Kumbalangi: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது கும்பலாங்கி, இங்கு வசிக்கும் 16 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் கோப்பைகள் (menstrual cups) வழங்கப்பட இருக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நாட்டிலேயே முதல் சானிடரி நாப்கின் இல்லாத கிராமம் என்ற பெருமையை கேரளாவில் உள்ள கும்பலாங்கி எனும் கிரமாம் பெற இருக்கிறது.

    மாதவிடாய் சுழற்சியின் காரணமாக சுமார் 12 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் உதிரப் போக்கு ஏற்படுவதுண்டு. வெளியேறும் ரத்தத்தை சேகரிப்பதற்காகவும், சுகாதாரத்தை பேணுவதற்காகவும் சானிடரி நாப்கின்களை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிடரி நேப்கின்களால் பெண்களின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    சானிடரி நாப்கின் மக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம் என கூறுகிறார்கள். நிலைமை இப்படியிருக்க சானிடரி நாப்கின்கள் போன்ற சுகாதார கழிவுகள் சரியாக கையாளப்படாததால் பெரு நகரங்களில் இது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அண்மையின் யானை சானத்தில், சானிடரி நாப்கின்கள், முகக்கவசங்கள் இருந்ததாக வனத்துறையினர் வெளியிட்ட வீடியோ வைரலானது, இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    Also read:  நோயாளிகளின் கல்லீரலில் நூதனமாக ஆட்டோகிராஃப் பொறித்த மருத்துவர் - அதிர்ச்சித் தகவல்கள்

    சானிடரி நாப்கின்கள் விவகாரத்தில் மாற்று சுகாதார முறைகளை கையாள வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் நாட்டிலேயே முதல் சானிடரி நாப்கின் இல்லாத கிராமம் என்ற பெருமையை கேரளாவில் உள்ள கும்பலாங்கி எனும் கிராமம் பெற இருக்கிறது. இதனை கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அறிவித்துள்ளார்.

    கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தீவு சுற்றுலா கிராமம் தான் கும்பலாங்கி, இங்கு வசிக்கும் 16 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் கோப்பைகள் (menstrual cups) வழங்கப்பட இருக்கின்றன. இக்கிராம பெண்களுக்கு மொத்தமாக 5,000 மாதவிடாய் கோப்பைகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    Also read:   Corona | இந்தியாவில் தடாலடியாக உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு

    இது தொடர்பாக எம்.பி ஹிபி இடன் கூறுகையில், எர்ணாகுளம் பாராளுமன்ற தொகுதியில் அமல்படுத்தப்பட்டுள்ள 'Avalkayi' (அவளுக்காக) என்ற திட்டத்தின் அங்கமாக இது செயல்படுத்தப்படுகிறது. இது தவிர Pradhan Mantri Sansad Adarsh Gram Yojana (SAGY) திட்டத்தின் கீழ் கும்பலாங்கி, இந்தியாவின் மாதிரி கிராமமாகவும் அறிவிக்கப்பட இருக்கிறது. கொச்சியின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கும் கும்பலாங்கியில் விரைவில் புதிய சுற்றுலா தகவல் மையம் ஒன்றும் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Kerala, Sanitary Napkin

    அடுத்த செய்தி