Live Update: நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி - குமாரசாமி அரசு கவிழ்ந்தது

நம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு நான்கு நாள்கள் கழித்து இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 209 ஆக இருந்தது.

Live Update: நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி - குமாரசாமி அரசு கவிழ்ந்தது
நம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு நான்கு நாள்கள் கழித்து இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 209 ஆக இருந்தது.
  • News18
  • Last Updated: July 23, 2019, 7:51 PM IST
  • Share this:
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்தார். அதன்மூலம், அவருடைய அரசு கவிழ்ந்தது.

கர்நாடகாவில் ஆளும் அரசைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து, கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடந்த 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். நம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு நான்கு நாள்கள் கழித்து இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 209 ஆக இருந்தது.


பெரும்பான்மையை நிருபிக்க 105 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. காங்கிரஸ், ஜே.டி.எஸ் கூட்டணிக்கு 99 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஆளும் அரசுக்கு எதிராக 105 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்தார்.

அதன்மூலம் அவருடைய ஆட்சி முடிவுக்கு வருகிறது. மீண்டும் பா.ஜ.க ஆட்சியமைக்கும் நிலையில் எடியூரப்பா முதல்வராவார் என்று தெரிகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமியை வீழ்த்தியதை பா.ஜ.க உறுப்பினர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Also see:
First published: July 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading