ஹோம் /நியூஸ் /இந்தியா /

’சத்தியமா உங்க அரசை கவிழ்க்கமாட்டோம்’- எடியூரப்பாவை நக்கலடித்த குமாரசாமி

’சத்தியமா உங்க அரசை கவிழ்க்கமாட்டோம்’- எடியூரப்பாவை நக்கலடித்த குமாரசாமி

குமாரசாமி

குமாரசாமி

சமீபத்தில் நடந்த கர்நாடக இடைத்தேர்தலில் 15-க்கு 12 இடங்களை பாஜக கைப்பற்றி எடியூரப்பா ஆட்சிக்கு பலம் சேர்த்தது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கர்நாடகாவில் பலகட்ட கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் எடியூரப்பா பிடித்துள்ள ஆட்சியை எந்தவித கெட்ட வழியிலும் நாங்கள் கழிக்கமாட்டோம் என சத்தியம் செய்கிறேன் என்று மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி கிண்டலாகப் பேசியுள்ளார்.

  ஹெச்.டி.குமாரசாமி கூறுகையில், “ஒரு முன்னாள் கர்நாடக முதலமைச்சராக எனது மாநிலத்தின் வளர்ச்சிதான் எனக்கு முக்கியம். பெரிய கஷ்டமெல்லாம் அனுபவித்து நான்காம் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் எடியூரப்பா. எனக்கு சந்தோஷமே. எந்த வகையிலும் நான் உங்கள் ஆட்சிக்கு இடையூறு தரமாட்டேன்.

  ஆனாலும், என்னிடம் பலர் இன்னும் ஏன் அமைதியாக இருப்பதாகக் கேள்வி எழுப்புகின்றனர். பாஜக-வை விட்டு 15-20 எம்.எல்.ஏ-க்கள் வெளியேறத் தயாராக இருக்கும்போது நான் ஏன் அடுத்த நகர்த்தலை மேற்கொள்ளக் கூடாது என பலர் என்னிடம் கேட்கின்றனர். நான் என்ன எடியூரப்பாவா ஆட்சியைக் கவிழ்க்க? எனக்கு மாநில நலனே முக்கியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  சமீபத்தில் நடந்த கர்நாடக இடைத்தேர்தலில் 15-க்கு 12 இடங்களை பாஜக கைப்பற்றி எடியூரப்பா ஆட்சிக்கு பலம் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

  மேலும் பார்க்க: 'ஒவ்வொரு அடியையும் எதிர்த்துப் போராடுவோம்’- மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள்

  Published by:Rahini M
  First published:

  Tags: HD Kumaraswamy