கணவர் முதலமைச்சர் - மனைவி எம்.எல்.ஏ: கர்நாடக சட்டப்பேரவையில் அரிய நிகழ்வு

ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அனிதா குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். அனிதா வெற்றி பெற்றுள்ளதால் கணவர் முதலமைச்சராகவும், மனைவி உறுப்பினராகவும் சட்டமன்றம் செல்கின்றனர்.

news18
Updated: November 7, 2018, 10:13 AM IST
கணவர் முதலமைச்சர் - மனைவி எம்.எல்.ஏ: கர்நாடக சட்டப்பேரவையில் அரிய நிகழ்வு
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் அவரது மனைவி அனிதாவிற்கு எம்.எல்.சி பசவராஜ் ஹார்ரதி வாழ்த்து தெரிவித்த போது
news18
Updated: November 7, 2018, 10:13 AM IST
கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமியும், அவரது மனைவி அனிதா குமாரசாமியும் உறுப்பினர்களாக புதிய சாதனை நிகழ்த்த உள்ளனர்.

ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், அனிதா குமாரசாமி, பாஜக வேட்பாளர் சந்திரசேகரை விட 1,09,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் குமாரசாமி இரண்டு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அதில் ராம்நகர் தொகுதியில் ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இங்கு அவரது மனைவி அனிதாவை களம் கண்டு வெற்றி பெற்றார். அனிதா வெற்றி பெற்றுள்ளதால் கணவர் முதலமைச்சராகவும், மனைவி உறுப்பினராகவும் சட்டமன்றம் செல்கின்றனர். கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை நடந்திராத நிகழ்வு இது.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ரெட்டி சகோதரர்கள் இருவர் ஒன்றாக தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். இவர்களை தவிர தந்தையும் மகனுமான கிருஷ்ணப்பா மற்றும் பிரியா கிருஷ்ணாவும், தந்தை மகளான ராமலிங்க ரெட்டியும், சௌமியா ரெட்டியும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

Also see...

First published: November 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626